பக்கம்:பிராயச்சித்தம்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிற்று முற்றும் பார்த்தால் வந்திருக்கும் இடம்கூடத் தெரியவில்லை. வழக்கம்போல் எங்கோ புத்தியில் வெகு தூரம் வந்துவிட்டதைக் கால்களின் வலி உணர்த்திற்று. கால் என்ன, உடம்பே சலித்துவிட்டது. நல்ல வேளை அதோ பஸ் ஸ்டாப். சிமிட்டிப் பெஞ்ச், முதுகுக்குச் சாய்வுடன் போய் அமர்ந்து ஒரு முறை கால் களை விறைப்பாக நீட்டி 'உஸ்...! அப்பாடி! என்ன சுகம்! சந்தடி அடங்கிப் போய்விட்ட தெருவின் கட்டிடங் களின்மீது பால் பிழிந்து கொண்டிருந்தது. பெளர்ணமி தாண்டின நாலாவது நாள். உதயம் தாமதமாயினும், சற்று விள்ளல் தெரிய ஆரம்பித்துவிட்டாலும் ஒளியும் குளுமையும் குன்ற ஆரம்பிக்கவில்லை. ஊரடங்கிவிட்ட முதிர்ந்த இரவு. கிழவர் மறுபடியும் பெருமூச்செறிந்தார். உடம்பு ஒய்ந்து போயிருந்ததே தவிர, மண்டையுள் குதிரை ஓடிக் கொண்டிருந்தது, பந்தயக் குதிரை. பனி வெள்ளை. அவ்வப்போது உதறிக்கொண்ட பிடரியி விருந்து ஒருவிதமான செருக்கும் பொறுமையின்மையும் சிந்தின. விழிகளில் சுபாவமான பெரும் உற்சாகத்துடன் சுபாவமான சிறுவிசனம் சேர்ந்து அதன் ஒட்டத்துக்கு ஒரு வெறி அழகு தந்தது. மூளையுள் வட்டமடித்துக் கொண்டு ஓட்டம் பழகிக் கொண்டிருந்தது.