பக்கம்:பிராயச்சித்தம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 லா. ச. ராமாமிருதம் கொண்டிருந்தான். அஞ்சு பவுனா? வெட்கக் கேடு, என்ன எடையோ, அவனுக்குக்கூடத் தெரியாது. அவனுடைய அந்த மார்வாரிக்கைதான் உணரும். 'இதன்மேல் கடன்பத்திரம் எப்பவோ காலாவதியா கிப்போச்சு. இந்த நகைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. மிஸ்டர் தர்மராஜன் இன்னிக் காலையில் எனக்குப் பெண் குளந்தை பிறந்திருச்சு. கோமதியம்மா, நகைக்கு சொந்தக் கார் உங்களுக்கு இதோ வாபஸ்...' கோமதி நகையை வாங்கிக் கொண்.ாள். அதைப் பார்க்கக்கூட இல்லை. நேரே அம்பாளிடம் சென்று அவள் கழுத்தில் போட்டு சரிப்படுத்தினாள். இன்ஸ்பெக்டர் தர்மராஜனிடம் வந்து கையைக் குலுக்கினார். தாங்க்யூ...ஃபைல் க்ளோஸ்...' எதுவும் சொல்லாமல் அங்கு விட்டு விலகியது யார்? பாவம், நரேன், நான் உனக்கு ஒன்றும் செய்வதற் கில்லை. மணி ஒலைச்சுவடியைக் கொண்டு வந்து திருப்பிக் கொடுததான். இன்னி பூஜை உன்னுடையதா? என் னுடையதா?’ என்றான். அவளைத் தான் கேட்கணும். அவள் என்ன சொல்கிறாள்? சிரிக்கிறாள்.