பக்கம்:பிராயச்சித்தம்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 லா. ச. ராமாமிருதம் கோமதியிடம் இன்னும் பேச்சு எடுக்கவில்லை. ஆனால் விடுதலை பெற வேண்டும். இனிமேல் எந்த வாசல் படியின் துரசோ, உறவின் பிசுக்கோ என்மேல் ஒட்ட விட மாட்டேன். உண்மையில் யார் பிரச்சனையை என்னால் தீர்க்க முடித்தது? தலையிட்டு, தலை தப்பினது தம்பிரான் புண் ணியமாப் போச்சு, காலையிலிருந்து அஸ்தமனம் வரை நடையாகவே நடந்து, கிடைத்ததைக் கொண்டு வயிறு அலம்பி, அந்தந்த இடத்தை அங்கேயே கையலம்பிவிட்டு மர நிழலோ சத்திரமோ, திண்ணையோ, குளக்கரையோ... இந்த ஆசையில் ஒரு romanticism, ஒரு முட்டாள் தனம்கூட இருப்பது தெரியாமல் இல்லை. நடைமுறைக்கு ஒத்தும் வரும் என்று தோன்றவில்லை. ஆனால் நான் வாழ்க்கையை என்ன அப்படிப் பெரிதாகக் கேட்டு விட்டேன்? ஆனால் என் தலையெழுத்து, என் அற்ப ஆசை.கூட ஒரு வதம் அல்லது கண்டமாகி விடுகிறது. உண்மையிலேயே என் இயல்பில் எனக்குப் பெரிய தேவைகள் வேண்டாம் கோபிச்சந்து. கொடுத்த காசோலை அப்படியே தூங்குகிறது. வங்கியில் என் பழைய தொகைகளை வாங்க நான் இன்னும் முயற்சி எடுக்க வில்லை. நேற்று கோவிவில் சந்தித்தபோது கோபிச்சந்த் சொல்லிவிட்டான், இந்த வாரம் கட்டாயமாக வேலை விஷயமாக வந்து பார்க்சச் சொல்லியிருக்கிறான். அப்புறம் ஜப்பானுக்குப் போய்விட்டால் திரும்ப நாலு மாஸம் ஆகுமாம். ஆனால் உண்மையில் எனக்குத் தேவைதானா? என் புல்லாங்குழல் எனக்குப் பற்றாதா? கறுப்பாக ஒரு உருவம் அவரைக் கடந்து சென்றது. முகம் தெரியவில்லை. தலைக்கு முக்காடு. கால்கூடத் தெரியாத படிக் கறுப்பு போர்த்திய உருவம்.