பக்கம்:பிராயச்சித்தம்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 லா, ச. ராமாமிருதம் இதுவரை நீங்கள் கேட்டது கதையாகவே இருந்து விட்டுப் போகட்டும். இந்த சமயத்துக்கு சாகதி நாம் நிற்க முடியாது. வேண்டாம். வாங்க போவோம்.

  • 宰 *

சிந்திர ன் மண்டை உச்சிக்கு வந்துவிட்டான். வானத்தின் முழு நீலத்தில் நக:த்ரக் கூட்டங்களின் நடுவே தனி சவாரி செய்கிறான். ஊர் உறங்குகிறது. தன் ஒளியை அதோ கீழே தெரியும் சிறு கோவில் கோபுரத்தின் ஒற்றை ஸ்தூபி மேல் பொழிகையில், ஸ்தூபி வெள்ளியாக மாறுகிறது. உள்ளே, கர்ப்பக்ருஹத்தின் மையிருளில்-ஆம் அந்தத் துங்கா விளக்குக்கூட அவிந்துவிட்டது-எண்ணெய் போதவில்லை-அவள் நின்று கொண்டிருக்கிறாள். வருடக் கணக்கில் நின்று கொண்டேயிருக்கிறாள், இருண்ட நெஞ்சங்களில் அவள் முகத்தில் ததும்பும் கருணை வெளிச்சத்தை, தெளிவை, தென்பைத் தந்துகொண்டு. குழந்தைகளா, துரங்குங்கள் நான் காவலிருக்கிறேன். சிக்குப் பிடித்த் ஆடையில் கமலாம்பிகை பரதைக் குட்டியாகத்தான் நிற்கிறாள். அவளுடைய ஜாஜ்வல்ய மான புன்னகைதான் அவளுடைய நகை, நம்முடைய சொத்து. வேறு என்ன வேண்டும்? 盒