பக்கம்:பிராயச்சித்தம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 லா. ச. ராமாமிருதம் சரியா, உச்சிமண்டையில் ஆணி அடிச்ச கேள்வி. இருக்கணும்னு தான் நினைக்கிறேன். சமீபத்தில் நான் கேட்கவில்லை. சுற்றுப்புறத்திலும் விசாரிக்கல்லே. இருந் தால் என்ன, இல்லாட்டா என்ன, குடும்பத்துக்குன்னு அவர் சம்பளம் பார்த்து புகக்கணக்காச்சு. நாங்கள் பிரியறதுக்கு முன்னால் ஒரு தடவை ஆபிஸ் பணத்தைக் கையாண்டுட்டதா... சுற்றுப்பட்டவா-அவரைக்காட்டி லும் என்னுடைய அதிர்ஷ்டம்னு தான் சொல்லனும். அவர் ஆபிஸ் மானேஜர் நல்லமாதிரி, விஷயத்தை மூக்கு முழி மீசை முளைக்கறதுக்கு முன்னால் அமுக்கிட்டா. அதை இட்டு ரொப்பறத்திலே, வீட்டிலே, ஏதேதோ சுரண்டிண்டு போயிடுத்து அப்புறம் அவரை காஷி' விருத்து வீட் மாத்திட்டா. இருந்தாலும் இப்படியெல் லாம் எத்தனை நாள் ஒடும்? எப்படியும் திருடன் பெண்டாட்டி-அப்புறம் சொல்ல வாய் கூ ச த து, சமுதாயம் நம்மை எப்படி பயத்தில் வெச்சிருக்கு பார்த்தேளா? சீட்டாட்டம்னா அப்படி ஒரு பைத்யமா ஆயிடுமா எ0ார்?" நீயேதான் பார்த்துக்கொண்டிருக்கிறாயே" அவர் ஏளனத்தில் துக்கம் துளித்தது.

வீட்டிலேயே சின்னச் சின்னச் சிங்காரத்திருட்டில் ஆரம்பிச்சு, ஏதேனும் பண்டம் வாங்கப் பெரிய நோட் டாக் கொடுத்தால், மிச்சம் திரும்பியும் வராது; அதற்குக் கணக்கும் கிடையாது. ஆர்ம்பத்தில் எனக்கும் கேட்க லஜ்ஜை. அப்படியே கேட்டாலும் என்னவோ சிரிச்சு மழுப்பிடுவார்.

'நர்ஸ்ரிக்குக் கட்டப் பணம் கொடுத்தால் ஹேகயா. அப்புறம் மேட்ரன் என்னைக் கூப்பிட்டு அனுப்பி நான் மறுபடியும் கட்டும்படி ஆச்சு. இப்படி இரண்டு மூணு தடவை நேர்ந்து, அப்புறம் ஐயாவிடம் பணம் கொடுப் பதை நிறுத்திக்கொண்டேன்.