பக்கம்:பிராயச்சித்தம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 லா. ச. ராமாமிருதம் உயிருக்கு நன்றி வேளை. நன்றி வேளை ஆனந்த நிலை. அஞ்சலியே! நன்றியே! என் ஆனந்தமே! ஹே அனாத பந்தோ! நாம் அநாதிகள். நம் பின்னும் அறியோம் முன்னும் அறியோம். அறியவும் வேண்டாம். நாம் அறிவற்றவர்கள். நீ யாரோ நான் யாரோ யார் யாரோ ஆரிரரோ. நீயும் நானும் நீலாம்பரம். இதோ-பிரிந்து கூடிய முத்தத்தில் என் உதடுகள் உன் மேல் பொருந்தி, நாக்கு நுனி எச்சில் உன் மேல் பட்டுச் சுவைத்து, என் மூச்சு உன் உள்புகுந்து ஓடி, இத்தனை கால மோனம். கலைந்த முதல் வீறலில் நீ அலறினதும்... நீயா ஜடம்? ஹஅம்! சொன்ன வாயை அலம்பு. கோபம் படமெடுக்கிறது. படத்தில் ரங்குகள் ஒடி விளையாடுகின்றன. நாத ரங் லீலா ஸ ரி க ம ப த நி ஸ் ப் த ஸ் வ ர மு நித் யாலோ லெள வித வித கானமு. சிரிக்கிறேன் அழுகிறேன் ஏ என் ஆனந்தப்பித்தே! &LI) & !} கமகங்கள் கமகமக்கின்றன. சிந்தனையோடு கலக் கின்றன. சிந்தாநாதம் தோன்றுகிறது. சிந்தா நாத நதி