பக்கம்:பிராயச்சித்தம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 5} பாம்பு வளைந்து ஓடுகிறது. கம கம கமக ஸ்கம மகஸ் நெஞ்செல்லாம் மணக்குதம்மா! வித வித நாதமு வித வித பேதமு வித வித கானமு வித வித ஜாலமு. ஆனந்தப் பிதற்றலே! முன்னால் நாம் ஒருவரையொருவர் அறிந்ததில்லையா? ஆனால் இன்று இப்போது என்ன புதுமை? புதுமை இருக்கிறது. எப்போதும் இருப்பதுதான். ஆனால் ஒவ்வொரு அடையாளமும் கண்டுகொள்ளும் ஒவ்வொரு சமயமும் புதுமைதான். அடையாளங்கள் அலுக்காதவரை புதுமைதான். புதுமையின் பெருமையே அதுதான். உபதேச நேரம், சமயம் எப்போது எவ்வாறு சீடனுக்கும் தெரியாது... குருவுக்கும் தெரியாது. உபதேசமான பின்னும் ஆன உபதேசம் என்ன? மந்த்ரமா? நாமமா? இப்படியிரு. அப்படியிராதே... இதெல்லாம் உபதேசமன்று. சக்தியோடு மோதி ஏதோ விதத்தில் நான் செத்துப் போனதை, அறிந்து புறப்பட்டேனே இதுதான் உபதேசம். காதோடு காது இல்லை. வாய்மொழியும் அன்று கண்ணோடு கண் இல்லை... இத்தனையும் உண்டு இத்தனையுமில்லை இதற்கு மேல் உண்டு. பொறி நேர்ந்து அதன் மின்னலில் போரிந்தேன். இதுதான் உபதேசம் என்று கண்டுகொண்டேன். இப்போதுதான் தெரிகிறேன்.