பக்கம்:பிராயச்சித்தம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 லா. ச. ராமாமிருதம் என் குழலே, என் குருவே, என் அலையே, என் துணையே. அஞ்சலி. என் அசடே, நான் வெட்தத்துக்கு உரியவன். என்னை எனக்கு நிரூபனையின் வீண் முயற்சியில், விருதாவாக ஏன் இத்தனை வார்த்தைகள், விளக்கங்கள், உபதேசங்கள்? ஏன்? உனக்குச் சொல்லின் துணை வேண்டியிருக் கிறது. முத்தியென்று சொல்வதை, சொல்லிக் கொள்வதைக் கண்டு கொண்டாலும், அது ஒரு மனநிலைதான், உச்சி மனநிலையென்று வேனுமானால் கொள். மன நிலையெனில் அதுவும் அலை நிலைதான். இனங்கண்டாயா, சுவை கண்டாயா, மண்டை வெடிக்குமுன் இறங்கு. அங்கே இருந்துகொண்டேயிருக்க முடியாது. அணித்யம்தான் நித்யம் கரை காணத்தான் அலை. அலையில்லாத கரை என்ன கரை? உயிரில்லாத கரையில் ஒதுங்காதே. ஆச்சி, தன் கணவன் இறந்ததற்குக் காரணம் நான் என்கிறாள். அவள் கணவன் முன்பின் பார்த்தது கூட இல்லை. நான் அவள் கணவன் கனவில் தோன்றினதே அடிப்படைக் காரணம் நான் எனும் அவள் வாதத்தில் தியாயம் இல்லாமல் இல்லையே! காற்றோடு காற்றாய்க் கரைந்துபோய்விடுவேனோ என் கோமதி கவலைப்படுகிறாள். ஆச்சி சொல்வதும் கோமதியின் கவலையும் ஏதோ தடத்தில் ஒன்றுதானோ?