பக்கம்:பிராயச்சித்தம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 53 ஆனால் சக்கரம் அறுக்கிறது. கபாலம் ஏந்துகிறது. கடவுள் உருவத்தில் கல் சிரிக்கிறது. ஆபிஸிலிருந்து கோமதி வீட்டுக்குத் திரும்பி வந்த போது, அவள் வந்ததுகூட அவர் அறியவில்லை. சுவரில் சாயாமல் முதுகு நிமிர்ந்து அசைவற்று மடியில் குழலுடன் உட்கார்ந்திருந்தார். 'ஸார் ஸாரு!’ சிரித்துக்கொண்டு கண் எதிரே விரலைச் சொடுக்கினாள். ஊஹூம் கோமதி பயந்து போனாள். கண்கள் உள்ளுக்கு இழுத்திருந்தன. ஸார், ஸார் தர்மராஜன் ஸார்...' தோளைப் பிடித்துக் குலுக்கினாள். மான்டில் பிசுபிசுத்துப் போய் விடுமோ? அப்போதுதான் விழிகள் நிலைக்குத் திரும்பின. நினைப்பும் திரும்பிற்று. "என்ன கோமதி: 'என்ன லார் ஆச்சு?’’ 'எனக்கு ஒண்ணும் தெரியாதே! முன்றானையால் அவர் முகத்தைத் துடைத்தாள். வேர்த்துக் கொட்டி விருந்தது. அவர் உடனே தன்னை விடுவித்துக்கொள்ள முயலாததே ஆச்சரியம். அவள் உடனேயே கொணர்ந்த ஹார்லிக்ஸ் பானத்தைக் குடித்ததும் ஒருவருக்கொருவர் மோனமான ஒப்புதலில் விஷயம் மேலும் விஸ்தரிப்பு இல்லாமல் அங்கேயே முடித்தது. 岑 索 嫩、 'விர்ே, இதைப் போட்டுண்டு பாருங்களேன், அளவு சரியாயிருக்கான்னு! ஏதோ ஒரு கண் மதிப்பில் வாங்கி வந்துட்டேன்.'