பக்கம்:பிள்ளை வரம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 4 பிள் 2 வரம் துண்டு. ஒரு நாள் காளியண்ணனைப் பண்ணைக்காரன் அடித்தான். வழக்கத்துக்கு மாருக அன்று அடி பலமாகையால் காளியண்ணன்கோபித்துக்கொண்டு எங்கேயோ ஒடிப் போய்விட்டான். இப்பொழுது அவன் கோயம்புத்துனர் ரயில் சந்திப்புக்கு வெளியே சாமான் துரக்கிக் கூலி, சம்பாதித்துக்கொண்டிருக் கிருன். உணவுக்குப் போக மீதி கிடைத்த காசுக்குச் சாயா குடிப்பான்; இரவிலே சினிமாவுக்குப் போகத் தவறமாட்டான். அவன் ரகசியமாக எப்பொழுதாவது சின்னனைப் பார்க்க வந்துவிடுவான். கோயம்புத்துTரிலிருந்து பெரியதாயக்கன்பாளையம் நான்காவது ர யி ல் திலேயம்; பதினுெரு மைல் தொலைவில் உள்ளது. காளியண்ணன் டிக்கட் வாங்குகிற பேச்சே கிடை யாது. யாருடைய மூட்டையையாவது துரக்கிக் கொண்டு, 'ஸார், உள்ளே கொண்டு போய் வைத்து விட்டு வருகிறேன்’ என்று புகுந்துவிடுவான். பெரிய தாயக்கன்பாளையம் வந்ததும் பழைய மாடு மேய்க்கி ஆகிவிடுவான். அவனே யாரும் டிக்கட் கேட்க மாட்டார்கள். காளியண்ணன் ஒவ்வொரு தடவையும் சினிமா வ்ைப்பற்றிச் சொல்லுவதையெல்லாம் கேட்கக் கேட்கச் சின்னனுக்கு ஆவல் பொங்கி வரும். ஆல்ை அதைத் தணிக்கத்தான் அவனுக்கு வழி கிடைக்க வில்லை. ஒரு நாள் சின்னனுடைய ஆசை அவனையும் மீறி விட்டது. எப்படியும் மறுநாள் கோழி கூப்பிடும் வேளையில் செல்லும் ரயிலில் யாரும் அறியாமல் ஏறி விடுவதென்று முடிவு செய்துவிட்டான். கோவை யிலே காளியண்ணன் இருக்கிருன்; அவைேடு சேர்ந்து கொண்டு சினிமாப் போக முடியாதா என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/115&oldid=825018" இலிருந்து மீள்விக்கப்பட்டது