பக்கம்:பிள்ளை வரம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிப்பாய் மருதப்பன் 16? ல் அவனுக்கு ஆறு மாதக் கடின காவல் 蠶。 (చేసే நீதிபதி கூறினர். மருதப்பன் மிகவும் பயந்து போய்விட்டான். அவனல் அழுகையை அடக்க முடியவில்லை. உண்மை யைச் சொல்லித் தன்னை மன்னிக்கும்படி நீதி பதியைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்ள வேண்டுமென்று அவன் நினைத்தான். "ஐயா, நான் எல்லாவற்றையும் ஒளிக்காமல் சொல்லிவிடுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று அவன் தொடங்கினன். "என் வீட்டுக்காரி எனக்கு அடிங்கி நடிக்கிறதே இல்லை. என்னை மிரட் டிக்கொண்டே யிருந்தாள். அவளே அடக்குவதற்கு என்னென்னவோ செய்து பார்த்தேன்; முடியவே யில்லை. ஊரெல்லாம் என்னைப் பெண்டிாட்டிக்குப் பயந்தவன் என்று பரிகாசம் செய்தார்கள். அதனல் நான் ஒரு தந்திரம் செய்து இப்படி வேஷம் போட் டேன். இந்தச் சிப்பாய் உடையைக் கண்டு அவள் அடங்கிவிட்டாள். நான் பேசாமல் வீட்டிலேயே அவளே மிரட்டிக்கொண்டிருக்காமல் இங்கு வந்தது பிசகாய்ப் போய்விட்டது. சிப்பாய் உடை அணி யவே எனக்குத் தலைக்கிறுக்கு வந்து இப்படிச் செய்து விட்டேன்." என்னை மன்னிக்க வேணும்; இனிமேல் இப்படிச் செய்யவோாட்டேன்' என்று கையெடுத் துக் கும்பிட்டான். "ஆ, அப்படியா? இந்தக் காக்கி உடைக்கு அவி வளவு சக்தியிருக்கிறதா? அடடா! இத்தனை நாள் எனக்கும் தெரியாமல் போய்விட்டதே' என்ருர் நீதிபதி. "ஊஹூம், இத்தனை நாளாய் வேஷம் போட் டுக்கொண்டா என்னை ஏமாத்தினப் வா வீட்டுக்கு, அப்புறம் பேசிக்கிறேன்” என்று கர்ஜித்தாள் நீதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/169&oldid=825089" இலிருந்து மீள்விக்கப்பட்டது