பக்கம்:பிள்ளை வரம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 - tosi Žar aigüe கறுப்பாயி மகளிடம் விந்து சமாதானம் சொல்லுவதும், தன் கணவனிடம் போய் அழுத வண்ணம் முறையிடுவதுமாக இருந்தாள். மாப்பிள்ளைக்கு இந்தப் பிணக்கு விஷயம் ஒன்றுமே தெரியாது. ஆவர் புது வேட்டி உடுத்துக் கொண்டு, விருந்து சாப்பிட்டுவிட்டு மைத்துனன் மார்களோடு உல்லாசமாக இருந்தார். மனைவி புதுச் சேலே கட்டிக்கொண்டு ஏன் தம்மிடம் இன்னும் வர வில்லை என்று மட்டும் கொஞ்சம் ஏக்கம். ஆளுல் இடைவிடாது தம்முடின் ம்ற்றவர்கள் இருந்து கொண்டிருப்பதளுல் வரவில்லைபோலும் என்று தமக்குள்ளேயே சமாதானமும் செய்து கொண் டார். கறுப்பாயியின் விசனமும் கோபமும் கலந்த குரல்கூட அவருக்குக் கேட்கவில்லை. அவையெல்லாம் மேற்புறம் புறக்கடையில் நடந்தவை. "அப்பவே நான் சொன்னேனே; அந்தச்சீலையை வாங்கிக்கிட்டு வந்திருந்தா என்ன போச்சு?’ என்று தொடங்குவாள் கறுப்பாயி. - அவ்ஸ் கணவர் பெரியதம்பிக் கவுண்டர், "என்னமோ வாங்கியாச்சு இப்போ என்ன பண்ண றது? இன்னெரு தடவைக்கு அதையே வாங்கினப் போவுது, ஒடியா போவும்? இதுவும் என்ன, அதுக்கு குறைஞ்சுதா? அது 120 ரூபாய்; இது 115 ரூபா" என்று சமாதானம் சொல்லுவார். 'அஞ்சு ரூபாதானே எச்சு? அதையே வாங்கிக் திட்டு வாரத்துக் கென்ன?” "என்னமோ ஏமாந்து போச்சு. நான் விலை எச்சுன்னு வாங்காமெ வல்லெ. இதே நல்லதுன்னு: அல்லாருஞ் சொன்னங்கோ; எனக்கும் பிடிச்சுது: எடுத்து வந்தேன். உடுத்திக்கச் சொல்லு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/172&oldid=825093" இலிருந்து மீள்விக்கப்பட்டது