பக்கம்:பிள்ளை வரம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குரங்கு மனம் I7t "நீங்களே போய்ச் சொல்லுங்க. நான் சொல்வி பாச்சு. உங்ககிட்டே நாளுெருத்தி சிக்கிக்கிட்டிேன்’ என்று கறுப்பாயி சொல்லிக்கொண்டே போவாள். இப்படி வாக்கு வாதம் அரைமணிக்கு, ஒரு. தடவை நடந்துகொண் டிருந்தது. ஒவ்வொரு. தடவையும் தாயின் கை உயர்ந்து வரலாயிற்று. மாலை மூன்றுமணி சுமாருக்குக் காளியம்மான் எழுந்து ஊருக்கு அருகிலுள்ள அவர்கள் தோட் டத்தை நோக்கிப் புறப்பட்டாள். படுத்துப் படுத்து. அவளுக்கே சலித்துவிட்டது. அவள் வருவதைக் கண்டி பெண்கள் அனைவரும் அவளுடைய புதுச் சேலையைப் பார்க்க வே ண் டு .ெ ம ன் று o வந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஏமாற்றம்; திகைப்பு. 'காளி யாத்தா, ஏன் பழைய துணியைக் கட்டிக் கொண்டிருக்கிறே?" எல்லோர் வாயிலும் இதே கேள்விதான். கானி யம்மாளுக்குப் பதில் சொல்வதே தொல்லையாகி விட்டது. "உடம்புக்கு நல்லால்லே; குளிச்சுக்கிலே’ என்று சொல்லியும் சொல்லாமலும் வேகமாக நடந்தாள். மாரப்பம்பாளையத்தில் பெரியதம்பிக் கவுண்டிச தாம் பெரிய பணக்காரர். அவர் வீட்டில் நடக்காத சிறப்பு அந்த ஊரில் வேறு எங்கும் இல்லை. காளி யம்மாள் இப்படிப் போவதைக் கண்டு யாராலும் ஆச்சரியத்தை மறைக்க முடியவில்லை. காளியம்மா ளுக்கும் அவர்களது மனம் தெரிந்துவிட்டது. விரைவிலே தோட்டத்துக்குள் நுழைத்து ஒரு சங்கம் புதர் மறைவில் தனியாக உட்கார்த்து கொண்டாள். அவள் மனத்தில் எத்தனை எத்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/173&oldid=825094" இலிருந்து மீள்விக்கப்பட்டது