பக்கம்:பிள்ளை வரம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿.燃 ද් .. 92 蠍密莎宵 @f露江 ஜோஸ்யம் பெரும்பாலும் பொய்யாகாது. அதோ, அந்த ஏழாம் நம்பர்க் குதிரை முதலில் வரப் போகிறது” என்பார். அதுவே முதலில் வரும். குப்புசாமிக்கு அளவில்லாத மகிழ்ச்சி உண்டாகும். அவர் ஆராய்ந்து கூறுவதைக் கேட்டுப் பலபேச் வெற்றி பெறலார்ைகள். இது கொஞ்சங் தொஞ்ச மாகக் குப்புசாமிக்கு ஆசை வலையை விரித்து விட்டது. அதற்குத் தகுந்தவாறு ஒரு சனிக்கிழமை மாலை, செட்டியார் அவரிடம் 500 ரூபாயைக் கொடுத்து, சுராஜ்மல்வில் தாம் வாங்கிய வைரத் தோட்டிற்குப் பாக்கி நின்றதைத் தீர்த்து வரும்படி: சொன்னுர், "மாலையில் பாங்கு மூடும்போது போய்க் கணக்கைத் தீர்த்துவிட்டு ரசீது வாங்கித் திங்கட் கிழமை கொண்டுவந்து விடுங்கள்” என்று செட்டி யார் சொல்வியிருந்தார். முன்னுலேயே சென்ருல் வேலை கெட்டுப் போகுமல்லவா? மேலும் குப்புசாமி யிடம் அவருக்கு முழு நம்பிக்கை இருந்தது. பின் எதற்காகப் பாங்கு வேலையைக் கெடுத்துக்கொண்டு முன்ஞலேயே அனுப்பவேண்டும்? - பாங்கு மூடியவுடன் குப்புசாமி பணத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். பஸ்ஸில் இருந்த பிரயாணிகளிற் சிலர் அடுத்த நான் நடக்கப்போகும் கிண்டிக் குதிரைப் பந்தயத்தைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். குப்புசாமிக்கு யோசனை பிறந்துவிட்டது. இந்த 500 ரூபாய் மட்டும் என் கையில் இருந்தால் நாளேக்கு ஏராளமாக வென்று விடலாம். நான் நினைக்கிற குதிரை நிச்சயமாய் முதலில் வரும். அதிலும் நாளேக்கு ஒடும் குதிரைகள் எல்லாம் எனக்கு நன்ருகத் தெரியும். எப்படியும் தர்ளேக்கு நான் சொல்வது கட்டாயம் பலிக்கும். நாளேக்கு மட்டும் நான் பந்தயம் கட்டினுல் கொள்ளே லாபம் அடித்துவிடலாம், வீட்டிலே என் மனைவி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/93&oldid=825180" இலிருந்து மீள்விக்கப்பட்டது