பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

06 புண்ணியம் ஆம் பாவம்போம்!

வாய்ந்த கடவுள் எனும் நம்பிக்கை எங்கும் பரவியிருந்தது. அதனால் துரா தொலையில் உள்ள ஊர்களிலிருந்தெல்லாம் மக்கள் அங்கே வந்து சாமிதரிசனம் செய்து, உடனடியாக வோ, சில தினங்கள் தங்கிய பிறகோ, திரும்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பக்கத்து ஊர்களில் உள்ளவர்களும் அந்த மாவட்டத்தின் வேறு வேறு இடங்களைச் சேர்ந்தவர்களம் ‘மாதாந்தம்’ என்று கடைசி வெள்ளிக்கிழமை தோறும் முருகன் கோயிலக்குச் செல்வதை ஒரு பழக்கமாக்கிக்கொண்டார்கள். பக்தி முற்றிய அல்லது, பணக் கொழுப்பு முற்றிய - அன்றி, வேறு ஏதோ காரணம் முற்றிப் போன - சிலபேர்கள் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் அங்கே போவதை ஒரு விரதமாக மேற்கொண்டி ருந்தார்கள்.

சிவகாமிநாதன் அப்பன் முருகனால் கவரப்பட்டு விட்டான் என்றே சொல்லவேண்டும். கண்டதும் காதல் விவகாரம்தான்! முருகன் திருமுன்னிலையில் நின்றபோது அவன் உள்ளத்தில் அமைதியும் ஆனந்தமும் நிறைந்ததை அவன் உணர்ந்தான். -

‘முருகா முருகா என்று உச்சரித்தவாறு, பக்தி பரவசத் தினால் முகம்மலர்ச்சியுற்று விளங்க அவன் பிரகாரத்தைச் சுற்றி வந்தபோது, அவன் எதிர்பாராத ஒரு சம்பவம் நிகழ்ந்தது. .

அவனுக்கு முன்னே சில அடிகளுக்கு அப்பால், இளம் பெண் ஒருத்தி போனாள். நீராடி விட்டு, ஈரச் சீலையை நன்றாகப் பிழியாமல் உடலில் அவசரக்கட்டாகச் சுற்றியி ருந்தாள். துணி உடலின் சில பகுதிகளில் ஒட்டிக்கொண்டு நயம் சேர்த்த அழகையும், அவள் நடக்கையில் ஏற்பட்ட பின் னழகுக் கோலத்தையும், நீர் முத்துக்கள் துளிர்த்துநின்ற சருமத்தின் மினுமினுப்பையும் தண்ணீர் சொட்டியவாறு