பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g புண்ணியம் ஆம் பாவம்போம்!

‘லிம்ப்ளாக இருந்தாலும், விளக்கிப் பொட்டிட்டு பூச்சாத்தி, ஏற்றி வைக்கப்பட்ட குத்து விளக்கு மாதிரி குளுமையாக இனிமையாக, அழகாக விளங்குகிறாள் இவள் என்று சிவகாமிநாதன் மனம் விமர்சித்து மகிழ்ந்தது.

அதே சமயத்தில் நம்ம வீட்டிலும் இருக்குதே ஒரு கோட்டான் விடியாமூஞ்சி. தங்கத்தையும் பட்டு பட்டாடை களும் சுமந்து கொண்டு! என்ன பிரயோஜனம்? முகத்தை எப்பவும் கொண்டை முடிஞ்சு போட்டது மாதிரித்தொங்க விட்டுக்கிட்டு சிரிச்ச முகமும் சீதேவியுமா இருக்கத் தெரியலியே என்றும் அது அலுத்துக் கொண்டது.

‘நீ வராமலே போயிடுவியோன்னு நெனைத்தேன். உன் தலையைப் பார்த்துத்தான் கல்லைப் போடனுமின்னு காத்திருந்தேன்’ என்று பவானி சொன்னாள். சிரித்தாள். ‘பயந்து ஓடி விடாதே! அடுப்பிலே தோசைக் கல்லு போடுறத பத்திச் சொன்னேன்! என்று கூறி விட்டு, உள்ளே போனாள். தோசை சுடுவதற்கு ஏற்பாடுகள் செய்தாள். அங்குமிங்கும் அலைந்து, அவனிடம் பேச்சுக் கொடுத்தவாறே அடுப்படி அலவல்களைக் கவனித்தாள். பிறகு அவன் எதிர்பாராத அறிவிப்பை உள்ளேயிருந்து ஒலிபரப்பினாள்.

‘நீ அங்கேயும் நான் இங்கேயும் இருந்து கத்திக் கொண்டிருப்பானேன்? முன் வாசல் கதவை சாத்தித் தாள்ப்பாள் போட்டுவிட்டு இங்கேயே வாயேன். சுடச்சுட தோசை எடுத்துப் போடுகிறேன் என்றாள் பவானி.

அவனுக்கு சிறு தயக்க உணர்வு தலைகாட்டியது. இருப்பினும், துணிந்தான். அவள் சொன்னபடியே செய்தான். கல்லிலிருந்து சுடச்சட தோசை எடுத்து அவள் அவன் தட்டில் போடப்போட, அவன் ருசித்துச்சுவைத்துத் தின்றான். ருசிக்கு ருசி ஏற்றும் விதத்தில் அவள் தோசை கல்லில் இருக்கிற போதே எண்ணெய் ஊற்றி, மிளகாய்ப் பொடியும் போட்டுத்