பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்

தேய்த்து வைத்தாள். அவளுடைய பார்வையும் பேச்சும் பரிவும் பிரியமும் அவன் உள்ளத்துக்கு இதமளித்தன. ‘பாக்கியம் இப்படி ஒரு தடவைகூட அன்பாக நடந்து கொள்வது இல்லையே! என்ற ஏக்கமும் அவனுள் வளர்ந்தது. .

உள்ளுணர்வினால் அவன் ஏக்கத்தைப் புரிந்து கொண்டவள்போல், பவானி குழைவுக் குரலில் கேட்டாள், ‘பாக்கியம் இப்படி எல்லாம் செய்து தருவது கிடையாதா? அவள் நல்ல படியாக நடந்து கொள்கிறாள் அல்லவா?” என்று.

அவன் தனது மனக்குறையை எல்லாம் முன முனக்க ஆரம்பித்தான். தன் வாழ்வின் வெறுமையை, ஏமாற்றங் களை, பாழ் பட்டுப் போன பசுமைக்கனவுகளை, கருகிச் சாம்பலாகிவிட்ட ஆசைகளை எல்லாம் அழுது புலம்புவது போல், சொன்னான். அன்போடும், ஆதரவோடும், கனிவு டனும், பொறுமையோடும் அருகேயிருந்து கேட்பதற்கு ஒரு நபர் இருந்தது - அதுவும் அந்நபர் பரிவும் பெண்மையும் மிகுதியாகக் கொண்டிருந்தது, அவனுக்கு ஒரு வித நிறைவும் திருப்தியும் தந்தது.

அவளும் தன் குறைகளை இடைக்கிடை எடுத்துச் சொன்னாள். ஆயினும், அவன் மனக்குறைகளை அறிந்து கொள்வதில் அக்கறை அதிகம் கொண்டவள் போல் நடந்தாள். ;

அவன் கை கழுவ எழுந்த போது, இந்தா என்ன இது! அதுக்குள்ளே எழுந்திரிச்சிட்டே? இன்னும் ஒண்ணே ஒண்ணு சாப்பிடு!’ என்று உபசரித்து, அவன் கையைப் பற்றி இழுத்து உட்கார வைத்தாள் பவானி. அவனுக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போலிருந்தது.