பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 1 13

அறியேன், முருகா முருகா! என்று முனகியது இன்னொரு மனம்.

அதன் கட்சி ஓங்கி வலுத்தது. ஒரு பெண்ணுக்கு புது வாழ்வு அளிப்பது புண்ணியம் தான். என்னை அமுக்கி வந்த பாவமும் விலகி விட்டது. எனக்கே ஒரு புதுச் சக்தி பிறந்துள் ளதாகத் தோன்றுகிறது என்று அவன் எண்ணினான். -

புருஷனால் கைவிடப்பட்ட அந்தப் பெண் இப்படித் தான் பிழைப்பு நடத்தி, வயிறு வளர்க்கிறாளோ என்றொரு சந்தேகம் அவனுள் தலைதூக்கியது அதனால் என்ன! வாழ்க்கை மகா பயங்கரமானது. புதிர்கள் நிறைந்தது. அதில் சிக்கி மன்தர்கள் எப்படி எப்படியோ உழல நேரிடுகிறது. முருகா முருகா என்று தன் தலையைத் தடவிக் கொண்டான் அப்பாவி சிவகாமிநாதன். அவன் புண்ணிய பூமியில் ‘மயிர்த்தியாகம் செய்துவிடவில்லைதான். அவன் தலைமுடி கருகருவென்று அழகிய கிராப்பாக மினுங்கிக் கொண்டுதானிருந்தது. &

‘இந்த ஊருக்கு மாதந்தோறும் வரவேண்டியதுதான். முடிந்தால் இரண்டு தடவை கூட வரவேண்டும் என்று தீர்மானம் கொண்டுவந்தது அந்த பக்தனின் உள்ளம்.

வெள்ளிக்கிழமை சாயங்காலம் வந்தால், சனிக்கிழமை லீவு போட்டுவிட்டால், ஞாயிற்றுக் கிழமை திரும்பிப் போக வசதியாக இருக்கும் என்று திருத்தம் இணைத்தது அவன் மனம்.

அதுதான் சரி. அப்பனே முருகா! என்று ஆமோதித்துத் தலையாட்டிக் கொண்டானவன்.