பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 புண்ணியம் ஆம் பாவம்போம்:

முடியும் அடிகளுக்கு கெளரவமோ, சுக செளகரியமோ அதிகரித்தால், மண்டுகங்கள், மகானின் மதிப்பைக் குறைக்கலாம் என்று கத்துகிறதுகள் அவர் மதிப்பு மங்காமல் உயர்ந்துகொண்டே தான் போகிறது என்று இவன் ஆனந்தம் கொள்வான்.

சூரியகாந்தம்மா என்றொரு அம்மையார் பணச் செழிப்பும் பவிஷ-ம் அவள் மேனியில் பளிச்சென மின்னும். வெண்ணெயும், நெய்யும், பாலும் பழமும், பச்சரிசியும் பருப்பும் வருஷக் கணக்கிலே ஊட்டம் கொடுத்து வளர்த்திருந்த தேகம். நல்ல சிவப்பு நிறம். முகம் பளிச்சென்று புதுக் காலண்டர் பிக்சர் மாதிரி மிளிரும். கண்கள் ஆகா! அவை அற்புதமான கவிதா ஊற்றுகள். அவளுக்கு வயசு நாற்பதுக்கு மேலிருக்கும். அவள் புருஷன் ஏதோ கம்பெனியில் டைரக்டரோ என்னவோ, சரியான பிசினஸ் பிச்சு. பணம் பணம் என்று திரட்டி முடிவதிலேயே கருத் தானவர். அம்மாளுக்கு ஆத்மீக விஷயங்களில் ஈடுபாடு ஏற்பட்டது. அவள், புனிதர், புண்ணியர், பூஜ்யர் அன்பானந்த அடிகளின் மதிப்பைப் புரிந்து கொண்டு அவர் பக்தை ஆகிவிட்டாள். -

அடிகள் எந்த ஊருக்குப் போனாலும் அம்மாளும் வந்துவிடுவாள். சில தினங்கள் தங்கி சுவாமிகளுக்குப் பணிவிடை செய்துவிட்டுப் போவாள். அடுத்த ஊருக்குப் போனதும், வசதியான இடத்தில் தங்கியதும், அடிகள் அம்மையாருக்கு தந்திகொடுத்துவிடுவார். பக்தை பறந்த்ோடி வருவாள. -

இது வழக்கமாக நடைபெற ஆரம்பித்ததும், பலர் பலவிதமாகப் பேசுவதும் தலையெடுத்து வேக ஆட்டம் போடலாயிற்று. ‘கலியுகக் கண்ணன் என்றும், கண்ணனின் ராதை’ என்றும் அவ்விருவரையும் குறிப்பிட்டார்கள் அநேகர்.