பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - • 125

ங்ொய ங்ொய’ என்று ஒலியில்லா ஒலியில் என்னென்னவோ பேச்சுகளும் பாடல்களும் நெளியும்படி பண்ணுவதும்...

- சில நினைவுகள் என்னை மிரளவைக்கின்றன. இவற்றை நான் முன்பே எண்ணிவிட்டேன் போலும், அல்லது முன்பு கனவில் கண்டேன் போலும், அன்றி எப்பவோ ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தேன் போலும் என்றொரு குழப்பம்...

எதிரே ஒரு ஆள் வருகிறது. இவரை முன்பு நான் பார்த்தி ருப் பேனோ?. அல்லது. சொப்பனத்தில் பார்த்தி ருப்பேனோ?... ஒருவர் கும்பிட்டுக் கொண்டோ, சலாமிட்ட வாறோ, புன் முறுவல் பூதத்தவாறோ வருகிறார். இவர் யார். இவரை நான் பார்த்திருப்பதாக ஞாபகமில்லையே? வேறு யாருக்காவது கும் பிடோ, சல் யூட்டோ, புன்னகையோ இருக்குமோ... நான் திரும்பி பின்னே நோக்க, அங்கே யாரும் இல்லாதிருக்க, நான் குழப்பத்தில் கும்பிடு அல்லது சலாம் அல்லது சிரிப்பு செய்யாது நடக்க, அவர் என்னை ஒரு மாதிரி யாகப் பார்த்தபடி போகிறார். அவர் என்னைக் குறித்து என்ன வேண்டுமாயினும் எண்ணமுடியும். சிறிது தூரம் போன பிறகு அல்லது ரொம்ப நேரம் ஆன பின்னர் . அந்த ஆள் யார் என்பது எனக்கு ஞானோதயமாகிறது என்ன பிரயோசனம்?

ஒரு சந்தர்ப்பத்தை என்னால் மறக்க முடியவில்லை. ரொம்ப வருஷங்களுக்கு முன் நடந்தது.

வீட்டில், உள் அறை ஒன்றில், நாங்கள் இருந்தோம். பேசிக்கொண்டோ, சாப்பிட்டவாறோ வெளிக் கதவு - கம்பிக் கதவு - சாத்தப் பட்டிருந்தது. திடீரென்று ஒருவர் கதவருகில் நின்று அதைத் திறந்து கொண்டு உள்ளே வர முயற்சி செய்வதைக் கண்டு நான் ஏஏய், ஏன் கதவைத்திறக்கிறே? திறக்காதே வேய்... ஒய் ஏன் அதைத் திறக்கறே? என்று கத்தினேன். வெறித்தனமாக உரத்த குரலில். மற்றவர்கள் வெளியே பார்த்தார்கள் ஏன் இப்படிக் கத்துறே? நம்ம மூக்க