பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. செல்லரிக்கும் நெஞ்சு

விண்ணையும் மண்ணையும் விரிகடலையும் பார்த்துக் கொண்டிருந்த விநாயகமூர்த்தி, முன்பு ஒருகவிஞன் நீல வானிலும் நெரித்த திரைக்கடலிலும் காதலியின் அழகு முகத்தைக் கண்டதுபோல, ஆசைமுகம் எதையும் பார்க் கவில்லை. அப்படிப் பார்க்க அவர் ஆசைப்பட்டால் அது நிறைவேறாது. காரணம், காதலி என்று எவளும் இதுவரை அவர் வாழ் வில் வந்து சேரவில்லை என்றாலும் அவர் பார்வையும், நினைவும் சதா காதலர்களையும் காதலையும் தான் சுற்றிவந்தன.

இப்போதுகூட மணி என்ன? பிற்பகல் மூன்று தான் ஆகிறது - ஆள் நடமாட்டம் இல்லாத கடலோரத்தில், கடற் கரை ரஸ்தாவை ஒட்டிய பள்ளத்தில் குளுகுளுவென நின்ற பசுமையான மரங்கள் பரப்பியிருந்த நிழலில் அமர்ந்திருந்த விநாயகமூர்த்தியின் பார்வை உல்லாச ஜோடி ஒன்றைத்தான் விழுங்கிக் கொண்டிருந்தது.

நல்ல வெயில்தான். காதல் செய்யக் கிளம்பும் யுவனும் யுவதியும் நேரத்தைப் பற்றி யோசிக்கிறார்களா? வெயிலைப் பற்றிக் கலைவப் படுகிறார்களா? அவர்கள் தனி உலகில்