பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 43

இந்த எண்ணம் எழவும் விநாயகமூர்த்தி துணிச்சல் வேணும். மனத்துணிவு உள்ளவங்கதான் சகல வாய்ப்பு களையும் பயன்படுத்திக்கொண்டு நன்றாக வாழ்கிறாங்க. வாழ்க்கையை அனுபவிக்கிறாங்க! என்று அறிவுரை கூறிக்கொண்டார்.

‘மற்றுமொரு ஜோடி!’ என்று அவர் கண்கள் படம் பிடித்துக் காட்டின. ஜாலியாகக் கைகோத்தபடி, சிரித்துப் பேசியவாறு, நடந்த ஜோடி நாங்கள் காதல் வளர்ப்பவர்கள். காதல் இன்பம் பெறுகிறவர்கள் என்று சொல்லாமல் விளக்குவதுபோல் காட்சி அளித்தது.

‘இவர்கள் முறைப்படி திருமணம் செய்துகொண்ட வர்கள் இல்லை. - -

இவனும் இவளும் ஒரே இடத்தில் உத்தியோகம் பார்க்கிறவர்களாக இருக்கலாம். வாய்ப்பைப் பயன்படுத்தத் தவறாத பாக்கியசாலிகள்! என்று அவர் மனம் முணு முணுத்தது. -

இவ்விதம் வாழ்க்கையை ஜாலிப்பாதையில் ஒட விடும் ஆசையும் துணிச்சலும் அவருக்கு இருந்திருக்குமானால்! விநாயகமூர்த்திக்கு வாய்ப்புகள் எதிர்ப்படாமல் இல்லை. முக்கியமாக தேவகியின் போக்கை அவர் குறிப்பிடலாம்.

அவர் பல வருடகாலம் குடியிருந்த ஒரு வீட்டின் சொந்தக்கார அம்மாளின் செல்வமகள் தேவகி. அவளுக்கு இருபத்துநான்கு வயசிருக்கும். கல்யாணமாகியிருந்தது. கணவனுக்கு துரத்து ஊர் ஒன்றில் உத்தியோகம். அதனால், தேவகி, காடாறு மாசம் நாடாறு மாசம்’ என்று வாழ்க்கை முறை அமைத்துக்கொண்ட விக்கிரமாதித்தன்போல, கணவன் வீட்டில் ஆறுமாதம் அம்மா வீட்டில் ஆறுமாதம் என்று நியதி வகுத்து, அதை வருஷம் தோறும் தவறாது கடைப்பிடித்து வந்தாள். ..