பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 புண்ணியம் ஆம் பாவம்போம்!

தேவகி முற்றிய நாகரிகமும் அல்ல, சுத்தக்கட்டுப் பெட்டியுமல்ல. ஸ்டைல் மிகுந்த பட்டணத்துப் பெண்ணு மில்லை. பழம்பசலிப் பட்டிக்காட்டு ரகமும் இல்லை. அவள் ரொம்பப் படித்தவளுமில்லை; படிப்பு வாசனை அற்றவளும் இல்லை. காதல் கதைகள் மலிந்த புத்தகங்களையும் பத்திரிகைகளையும் ஆசையோடு படிப்பாள். அதைவிட அதிகமான ஆர்வத்தோடு, காதல் காட்சிகள் மிகுந்த, தமிழ் படங்களைப் பார்ப்பாள். பிறகு அப்படங்களின் காட்சி களையும், பாட்டுகளையும் வசனங்களையும் வர்ணித்துப் பொழுது போக்கி மகிழ்வாள் அவள் தாராளமாக யாருடனும் பேசிப் பழகும் சுபாவம் பெற்றிருந்தாள்.

விநாயகமூர்த்தியுடனும் அவள் சகஜமாகப் பழகினாள். அவர் வசித்த வீட்டுக்குள் இஷ டம்போல் வருவாள். போவாள். அவரிடமும் தான் கண்ட சினிமா நபர்களை, உரிய அபிநயங்களோடு, விவரிப்பாள். தனக்குத் தேவைப்படும் சில சாமான்களை வாங்கிவரும்படி அடிக்கடி பணம் கொடுத்து அனுப்புவாள். நீங்க ஏன் கல்யாணம் செய்து கொள்ளவில்லை?” என்னைப்போல் ஒருத்தியைத் தேடிப் பிடித்துக் கல்யாணம் பண்ணிக் கொள்வதுதானே? என்று நச்சரிப்பாள். ஒருநாள், எனக்கு மட்டும் கல்யாணம் ஆகாம லிருந்தால் நான் உங்களையே கல்யாணம் செய்து கொள்வேன். நீங்க எவ்வளவுதான் மறுத்தாலும் யாரு விடுவாங்க?’ என்று அவள் அறிவித்தாள். சில சமயம் அச்சம், மடம், நாணம் முதலிய பெண்மைப் பண்புகளைக் காற்றோடு போக விட்டுவிடுகிற குணம் பெற்றவள் தான் அவள்.

ஒரு சமயம் தேவகி தனக்குத்தேவையான உள்பாடியை ரெடிமேட் கடையிலிருந்து வாங்கிவரும்படி அவரை ஏவினாள். அவர் வாங்கிவந்த ‘பிரேஸியர்’ அவளுக்குப் பிடித்திருந்தது. வீட்டுக்குப்போய் அந்த நாகரீக டிசைன் ‘பிராவை மட்டும் அணிந்து கொண்டு அவர் இருந்த