பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t

4.

8


புண்ணியம் ஆம் பாவம்போம்!

பிறகு அவர் மனம் உளையத்தான் செய்தது. இந்த விருந்து எப்படி இருக்கும் என்று சுவைத்துப் பார்த்திருக் கலாமே. கெடுத்து விட்டேன்’ என்று வருத்தம்.

‘சிறு வயசிலிருந்து நமக்கு நாமே ஏற்படுத்திக்கொள்கிற பழக்க வழக்கங்களும் பண்புகளும் - அவை நல்லவையோ கெட்டவையோ - நம்மை இறுகப் பிணித்து விடுகின்றன; விலங்குகள் மாதிரி. நல்ல கபாவங்களும் நற்பண்புகளும் பொன் விலங்குகளாக இருக்கலாம். பொன் கொண்டிழைத்து மணி கொண்டு புதைத்தவையாக இருந்தாலும், விலங்குகள் விலங்குகள் தானே? அவற்றைத் தகர்த்து எறியவும், உடைத்து விட்டு இஷ்டம் போல் செயல் புரியவும் எவ்வளவோ துணிச்சல் வேண்டும். மனத்துணிவும் செயலாற்றலும் தான். இவ்வளவு காலத்துக்குப் பிறகு அவற்றை நான் பெறுவேன் என்று எனக்குத் தோன்றவில்லை என்று அவரே சிந்தித்துக் கொண்டார். - .

நேரம் ஒடியிருந்தது. கடல் ஒரத்திலும் மணல் வெளி யிலும், ரஸ்தாவை ஒட்டிய நடை பாதையிலும் ஜன நடமாட்டம் அதிகரித்துவிட்டது. தனி மனிதர்களும், ஜோடி களும் பொம்மெனப் புகுந்து மொய்க்கும் மனோகரமான வேளைதானே! -

விநாயக மூர்த்தி கண்களுக்கு விருந்து அளிக்கும் எண்ணத்தோடு எழுந்து நடந்தார். பார்வை விருந்து அவர் மனப்பசியைக் கிளறிவிடத்தான் செய்யும் ! அதை அவர் தடுத்துவிட முடியாதுதான். - -