பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் . 87

பாக்கியம் பிள்ளையின் புதிய தொன தொணப்பை ஒயாது கேட்டுச் சகித்துக் கொள்ள வேண்டியதை தவிர்க்க இயலாக கடமையாகப் பெற்றுவிட்ட அவருடைய மனைவி மீனம் மாளின் மனம் தனக்குத் தானாகவே சித்திரித்துக் கொண்ட விஷயம் ரசமானது. அவள் நினைத்தாள்.

செல்லையா வீடு திரும்புகிறான். டேலே, பேப்பரைப் பாத்தியா? உன் நெம்பர் வந்திருக்காடா? என்று எக் காளமாகக் கேட்கிறார் தந்தை.

‘என் நம்பர் அதுலே இல்லே என்று முணுமுணுக்கிறான் பையன்.

‘நீ ஒழுங்காப் படிச்சு, பரீட்சை நல்லா எழுதி, பாஸ் பண்ணியிருந்தால் தானே நம்பர் வரும்?’ என்று கனன்ற பெரியவர் சீறிப் பாய்கிறார். ஏலே, நீயெல்லாம் எங்கேலே உருப்படப் போறே? புஸ்தகத்தைக் கையிலே பிடிச்சுக் கிட்டு, சாப்பாட்டை நெனைச்சுக்கிட்டே இருப்பே. மூக்கு முட்ட ஒரு இழுப்பு. வேளாவேளைக்கு ஒரு வெட்டு. படிக்கிற புள்ளைக்கு வயிறு முட்டச் சோறு போடப்படாது. அது அந்த முண்டத்துக்கு எங்கே தெரியுது? திணி திணி யின்னு சோத்தைத் திணிக்கிறா, நீ குதிரு மாதிரி வளர்ந் துட்டே. தலையைச் சீவிட்டு, நெல்லுக் கொட்டி வைக்க உபயோகப்படுத்தினாலும், ரெண்டு கோட்டை நெல்லு நிரப்பலாம். அப்படி உடலு பெருத்திருக்கு. என்ன பிரயோசனம்?’ என்று ஏசுகிறார். அவன் பக்கமாகக் காறித் துப்புகிறார்.

ராத்திரி பூராவும், மறுநாளும் தினம் தினம் ஏசிக் கொண்டேயிருக்கிறார். தாய் தவறாது சாப்பாடு கொடுப் பதற்காக அவளையும் திட்டுகிறார். தெண்டத்துக்கு பணம் செலவு பண்ணி, உன்னை ரெண்டாம் வருசமும் அதே வகுப்பில் படிக்க வைக்க வேண்டியிருக்குத. எங்கேயாவது