பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 : புண்ணியம் ஆம் பாவம்போம்!

இவ்வாறு அடித்துப் பேசியது பரதேசியா பிள்ளை மனம்.

சொக்கையாப் பிள்ளை ஒரு டைப். வாழ்க்கையில் ரொம்பவும் அடிப்பட்டவர். அவர் மனமும் பாக்கியம் பிள்ளையின் அதிர்ஷ்டம் பற்றி ஒரு படம் பிடித்துக் காட்டியது.

செல்லையா செத்துப் போயிட்டான். அப்பனுக்குத் துக்கம் இருக்கத்தான் செய்யும். ஒரு விதத்திலே இதை அதிர்ஷ்டம்னு சொல்லனும். பையன் பாஸ் பண்ணி, மேல் படிப்புப் படிச்சு, இஞ்சினிரு வேலைக்கும் வந்து விடுகி றான்னே வச்சுக்கிடுவோம். ஒரு பேச்சுக்குச் சொல்லுதேன். அவனுக்குப் பெரிய இடத்திலே கலியாணமும் ஆயிடுது. சரி, இவரு எதிர்பார்க்கிறபடி இவருக்கு சுக செளகரியம் எல்லாம் கிடைச்சுடுமா? அது ஏது? இந்தக் காலத்துப் புள்ளைகளைத் தெரியாதா? பெண்டாட்டியாத்தா பெரியாத்தாயின்னு அவள் கொடுக்கைப் புடிச்சிட்டு பல்லை இளிச்சுக்கிட்டு அலைகி நானுகளே. அந்த இனத்திலேதான் இந்தச் செல்லையாப் பயலும் சேருவான். அப்போ பிள்ளைவாளுக்கு நஷ்டக் கணக்கு ஜாஸ்தி. ஏமாற்றம், மன வேதனை, தலைக்குனிவு எல்லாம் அதிகமாக இருக்கும். இப்போ அதுக்கெல்லாம் இடம் இல்லாமல் போச்சு பாருங்க.

இந்த விதமாகப் பலவித மனமும் பலரக அபிப்பிராயங் களை உலுப்புவதற்கு பாக்கியம் பிள்ளையின் புலம்பல் வழி செய்தது. - - -

ஆகா, மனசின் ஆற்றல்தான் என்னே, என்னே!