பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 197

‘இரவு ராணிகளைப் பற்றியும் இடி ராஜாக்களை பற்றியும் சுவையான செய்திகள்; இரட்டை அர்த்தம் தொனிக்கும சொல்லட்சி; சமூகத்தில் நாற்றமடிக்கும் சாக்கடை விஷயங்கள்; வெளிச்சமிடும் மேனிமினுக்கிகளின் படங்கள், பேட்டிகள் மட்டரகமான கடிதங்கள் - இவ்வாறு பலதரப்பட்ட விருந்துகளையும் தயாரித்து விநியோகிக்கும் தொழிற்கூடம் ஆயிற்று அருளானந்தரின் அலுவலகம்.

அவருடைய ஏடும் தாளும் சூடான தோசைகள் போல் ‘டிமாண்ட் உண்டாக்கின.

அச்சடிக்கப்பட்ட தாள்களை வெள்ளை விலைக்கு விறுவிறுப்பாக விற்பனை செய்வதன் மூலம் பெறுகிற பணத்தை விட, அதிகமான லாபத்தை, அச்சடிக்காத காகிதத்தை கறுப்பு விலைக்கு விற்பதன் மூலம் வேகமாகப் பெற முடியும் என்பதையும் அவர்.புரிந்து கொண்டார்.

எனவே அவர் பிசினஸ் இரு தன்மைகளிலும் வெற்றிகரமாக வளர்ந்தது. அவருடைய ஏட்டுக்கும் தாளுக்கும் விசேஷமான கவனிப்பும் பெயரும் கிட்டின.

காகிதக் கட்டுகளையே சிம்மாசனமாகக் கொண்டு, பணமூட்டையை செங்கோலாக ஏற்று, நானே பேப்பர் ராஜா, எனது பேப்பர்களே அதிகம் அதிகமாகச் செலவாகின்றன. ஆகவே, எனக்குத்தான்பிரஜைகள் அதிகம் என்று மிக மகிழ்ந்து போனார் அருளானந்தர்.

‘சரியான அரசியல் கோமாளி’ என்று சிரித்தது காலம்

சிரிக்க வைப்பது கோமாளியின் தொழில். சில கோமாளிகள் சிந்தனை புரிந்து, சிரிப்போடு கண்ணிரையும் கலந்துதந்து, மக்களையும் சிந்திக்கும்படி முயற்சி செய்வதும் உண்டு. அவர்கள் மேதைகள்; லட்சியவாதிகளும் கூட.