பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆல்லிக்கண்ணன் - 203

‘பணம், பட்டம், பதவி நம்மை வாழ்விக்கும் மூல மந்திரங்கள் என்பது அம் மடத்தார்களின் குறிக்கோள் ஆயிற்று.

இளம் அடியாரின் பேச்சு, கூத்து, தோற்றம் காரணமாக அவருக்கென்று பல அன்பர்கள் சேர்ந்தார்கள். அவருடைய பேச்சாற்றலின் கலகல நாதம் பலரை மயக்கியது சொல்ஜாலம் எத்தனையோ பேரை வசீகரித்தது.

காலப்பாழின் கவனிப்பற்ற இடத்தின் இருள் மண்டிய உள்ளத்தர் பலரை வசீகரிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார்.அழகனார் என்பவர். அவரது பணகாந்தி இளம் அடியாரை வசீகரித்தது. அடியாரின் சொல் காந்தி அழகனாரைக் கவர்ந்தது.

இவர் இளம் தலைவர். நல்லதோர் வழிகாட்டி என்று புகழ்ந்தார் அழகனார். r

‘இவர் தலைவர். இவர் கடவுள் என்று பாராட்டினார் இளம் அடியார்.

வாரி வழங்கும் வள்ளல் ஆனார் அழகர். ம்டத் தலைவர் இருவரையும் பாராட்டினார். அவருக்குப் பணமும் புகழும் கிடைத்துக் கொண்டேயிருந்தன. அதற்கு வழிவகுப்போரைப் பாராட்டாது இருக்கலாமா?

காலப் பாழில் கவனிப்புக்கு உரிய இடமாக மாறிவிட்ட அந்தப் பெருநிலத்தில் புதிய புதிய புதர்கள் மண்டி வளர்ந்தன. ஊழல் பொய்கைகளும் நச்சுக் குழிகளும் வாய்பிளந்து நின்றன.

பணம், பதவி, பட்டம் என்ற மந்திர ஒலி மடத்தினுள் பல நாதங்களில் முழங்கிக் கொண்டிருந்தது.

இளம் அடியாரின் சித்த வெளியில் புதிய புதிய ஒளிகள் மின்னலிட்டன. அவர் மனக் குகையில் புத்தம் புது ஆசைகள் உறுமின. அவரது ஆற்றலில் அவருக்கு அளவிலா நம்பிக்கை வளர்ந்தது. நீரே செயலுரு. நீரே உணர்வின் வடிவம். நீரே