பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 22

அந்தி சந்தியிலே, முந்திக் கறுக்கு நேரத்திலே, வாசல்லே, தெருவிலே நின்னுக்கிட்டு, நம்ம விருப்பத்தை, ஆசையை, வாய்விட்டுச் சொல்லப்படாது சிவகாமி.

சொன்னா என்னவாம்? என்று குறுக்கு விசாரணை பண்ணினாள் பேத்தி.

‘சூரியன் மறஞ்சு, கருகருன்னு இருட்டு வாற நேரத்திலே காத்து கறுப்புகளெல்லாம் மானத்திலே குறுக்கும் நெடுக்குமா திரியும்...’

‘காத்து கறுப்புகன்னா என்ன ஆச்சி?

‘அதுதான்ட்டி பேய், பிசாசுக, கெட்ட ஆவிக. அதுக யாரை புடிக்கலாம், எவரை மயக்கி இழுத்துக் கிட்டுப் போயி அடிச்சு ரத்தம் குடிக்கலாம்னு அலையும். மனுசங்க சொல்றதை அதுக கேட்டுக்கிட்டு, இருட்டோடு இருட்டா கள்ளத்தனமா வந்து, குரலு மாத்திக் கூப்பிட்டு, கூடவே கூட்டிக் கிட்டுப்போகும். சமயம் பாத்து அடிச்சுப் போடும் என்று உரிய பாவங்களோடு சொல்லி முடித்தாள் ஆச்சி.

பேத்தி சிவகாமிக்கு உள்ளுக்குள்ளே உதைப்பு தான். இருந்தாலும் நீட்டி முழக்கினாள்: போ ஆச்சி, நீ ஒருத்தி! அப்படில்லாம் நடக்குமா என்ன?” -

‘நீ சின்னஞ் சிறுசு, உனக்கு என்ன தெரியும் என்றாள் வள்ளி ஆச்சி. -

‘நீ தெரு வாசல்லே நின்னு கத்துதே, விடியக் காலையிலே என்னையும் ஆத்தக்குக் கூப்பிடுன்னு. அது ஒரு இது காதுலே விழுந்ததுன்னு வச்சுக்கோ. ஒகோ இப்படியா சேதின்னு தலையை ஆட்டிக்கிட்டுப்போயிரும். அப்றம் அதிகாலையிலே எனக்கு முன்னாடியே வந்த அது ஏட்டி சிவகாமி, ஏந்திரி ஏந்திரி. நேரமாச்சு, ஆத்துக்கு வரலியான்னு கூப்பிடும். நீ என்னோட