பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 23

குடிப்பாரு. பெரிய செம்புக்கு ஒரு செம்பு தண்ணி குடிச்சிரு வாரு. அது சவம் எதுக்களிச்சிக்கிட்டே இருக்கும். அதுனாலே அவரு துப்பிக்கிட்டே இருப்பாரு. எச்சியிலே தன்னியும் சோத்துப் பருக்கையும் கலந்து வரும். இப்படி ரொம்ப நேரத்துக்கு கக்கிய படி இருப்பாரு, இதைப் பார்த்த ஒருத்தன் இரைகக் கியா பிள்ளைன்னு அவரை சாட்டிப் பேசினான். மத்தவங்களும் சொல்ல ஆரம்பிச்சாங்க அதுவே அவருக்கு ஒரு பேரா நிலைச்சிட்டுது.” --

‘சரி, என்னமோ பேயிபத்தி சொல்ல ஆரம்பிச்சியே?’ என்று பேச்சை உரிய தடத்திலே திருப்பினாள் சிவகாமி.

அதைத்தான் சொல்லவாறேன். இந்த இரைகக்கியா பிள்ளையோட அப்பா மாரி ஆடும்பெருமாள் பிள்ளை...”

அது அவரு நெசப்பேரா, இல்லை, எதாவது காரணத் தாலே ஏற்பட்டபேரா ஆச்சி? என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் சிவகாமி. - -

‘இத அவரோட சொந்தப் பேரு. அப்பா, அம்மா வச்ச பேருதான்... அவரு கீரைத் தோட்டம் போட்டிருந்தாரு. ஊருக்கு வெளியே, அரச மரமும், தெப்பக்குளமும் இருக் குல்லா. அது பக்கத்திலே இப்ப பொட்டலா, கல்லும் - கட்டியும் கட்டாந்தரையுமாகிடக்குதே, அது முன்பு தோட்டமா பச்சைப் பசேல்னு இருந்த இடமாக்கும். பக்கத்துப் பொட்டலு தோட்டம்தான். அதிலே ஒரு கிணறு, துலாக் கல்லு எல்லாம் இருக்கு பாத்திருப்பியே? அந்தக் காலத்திலே அங்கே அரைக் கீரை, நல்ல தண்டுக்கீரை, வெண்டை, சீனி அவரைக்காய், மஞ்சள் எல்லாம் பயிர் பண்ணி வந்தாங்க. எல்லாம் செழிப்பா வளர்ந்து பலன் கொடுத்துக்கிட்டுத்தான் இருந்தது.

‘புறகு, புறகு மக்களுக்கு சோம்பேறித்தனம், சுகவாச நினைப்பு, நாகரிகம்னு என்னென்ன வெல்லாமோ ஏற்பட்டுப் போச்சு. ஊரு ரொம்ப மாறிப் போச்சு...'