பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனு என்ற மீனுக்குட்டி என்கிற மீனாம்பாளுக்கு நான்கு வயதுதான் ஆகிறது. ஆயினும் அவள் தன்னுடைய பிரசன் னத்தை அவ்வீட்டிலே நிரந்தரமாகவும் அழுத்தமாகவும் நிலைநாட்டி விட்டாள். அவளைப் பற்றி அவள் பாட்டிக்குப் பெருமை; அப்பாவுக்கு அபாரப் பெருமை; அம்மாவுக்குப் பெருமையாவது பெருமை ஐயோ!

‘மீனுக்குட்டி என் தங்கக் கட்டி - என் செல்லக்கண்ணு!” என்று அம்மா வாய் மணக்க, நா இனிக்க, மனம் குளிரப் பேசாத பொழுது கிடையாது என்றே சொல்லிவிடலாம்.

பாட்டி பார்வதி அம்மாளுக்கோ பேத்தியைக் கொஞ்சுவதும், தூக்கி வைத்துக்கொண்டு அலைவதும், எங்க ராசாத்தி மீனம்மர் இன்னிக்கு என்ன செய்தாள், தெரியுமா?” என்று ஆரம்பித்து, அவளது புரவோலத்தை எடுத்துச் சொல் வதும் தவிர, வேறு வேலை எதுவும் இல்லை என்றே தோன்றும்.

‘எங்க மீனு மகா சமர்த்து. வருங்காலத்திலே அவள் பெரிய டாக்டராக வரப்போகிறாளாக்கும்... அப்படியாக்கும்,