பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 235

நல்லாவிடிஞ்ச பிறகு மாடசாமி வந்தான். தோட்டத்தைப் பார்த்தான். வெள்ளக்காடா தண்ணி பெருகிக் கிடக்கு. மம்பட்டி கைப்பிடி சுக்கு நூறா சிதறிக் கிடக்கு. அவன் பதறி அடிச்சு மாரியா பிள்ளை வீட்டுக்கு வந்தான். கூட ரெண்டு மூணு பேரும் வந்தாங்க. பிள்ளை மெதுவா எழுந்திரிச்சு வந்தாரு. இப்பிடி இப்படி விசயம்னு சொன்னாரு மாடசாமியும், மத்தவங்களும் தாங்க பார்த்ததைச் சொன்னாங்க. இது இது இன்னின்னா மாதிரி நடந்திருக்கும்னு ஊகிச் சாங்க. இந்த விசயம் எல்லாருக்கும் ஒரு எச்சரிக்கையா திரும்பத் திரும்ப சொல்லப் படுறது ஊரிலே ஒரு வழக்கமா நிலைச்சிடடது”, என்று வள்ளி ஆச்சி விளக்கினாள்.

சவத்து மூதி பேயிக ஏன் தான் இந்தப் போக்கு போகுதுகளோ எனறு அலுத்துக்கொண்டாள் சிவகாமி.

‘நாம முழிப்பா இருக்கணும். பயப்படக் கூடாது. அதுதான் முக்கியம்’ என்றாள் வள்ளி ஆச்சி.