பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 புண்ணியம் ஆம் பாவம்போம்!

‘மாரியா பிள்ளை என்ன செஞ்சாரு தெரியுமா? மம் பட்டியை கீழே வச்சாரு தான் கட்டியிருந்த தலைப்பாவை எடுத்து மம்பட்டிக்கையிலே நைசா வச்சாரு. அதைப் பார்க்கை யிலே, தலைப்பாக் கட்டிய ஆளு குத்த வச்சிருக்க மாதிரித் தோணும். அவரு திரும்பிப் பாராம வேகமா நடந்தாரு. தண்டங் கீரையும் ஆமணக்குசெடிகளும் ஆளு உசரத்துக்கு வளர்ந்து அடர்ந்து நிற்கதுனாலே, அவரு வெளியே வந்தது தெரியாது. அவரு அம்மனை நினைச்சுக்கிட்டு, வேகமா வீடு வந்து சேர்ந்தாரு வாசல்லே நின்னு மூணு தடவை துப்பிப் போட்டு, வீட்டுக்குள்ளே புகுந்து கதவை சாத்தி தாப்பா போட்டாரு. நல்லா மூடி மூக்காடிட்டு படுத்திட்டாரு. மனசு மட்டும் அறமளத்தா பேரை சொல்லிக் கிட்டே இருந்தது.”

அந்தப் பேயி என்ன செஞ்சுது ஆச்சி?’ என்று அவசரப்பட்டாள் சிவகாமி. .

அது பாட்டுக்கு துலாவிலே தண்ணி இறைச்சுக்கிட்டே இருக்கு. அதுக்கா அலுத்தப் போனதும், ஏலே ஏன்னா, நான் தண்ணி இறைச்சிக்கிட்டே இருக்கேன். போதும் போதாதுன்னு சொல்லாம இருந்தா என்னாலே அர்த்தம்னு உறுமூச்சு. ஆங்காரமா வந்தது. ஒகோ, நான் கஷ்டப்பட்டு தண்ணி இறைக்கேன், நீ உக்காந்துக்கிட்டு தூங்குதியாலேன்னு கத்தியபடி ஓங்கி ஒரு அறை அறைஞ்சது. மம்பட்டிக் கைப்பிடி தூள்தூள சிதறித் தெறிக்கது. இரும்பு துள்ளி விழுந்தது. பேய் ஒடியே போயிட்டுது. பேய்களுக்கு இரும் புன்னா பயம். அப்பதான் விடிவெள்ளி ரொம்ப பிரகாசமா கிழக்கே தோணிச்சு. .

‘இது உனக்கு எப்படி தெரிஞ்சுது ஆச்சி2 என்று இயல் பாகக் கேட்டாள் பேத்தி. அவள் கிண்டல் பண்ணுகிறாளோ என்ற சந்தேகம் ஆச்சிக்கு.