பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன்


2

3

7

இப்படியாக்கும்...’ இந்த ரீதியில் தான் ஒலிக்கும் அவள் அப்பா சொர்ணம் பிள்ளையின் பேச்சு.

மேளம் கொட்டினால், பூசாரி ஆடுகிறான். உற்சாகப் படுத்தினால், குரங்கு கூத்தாடுகிற்து. தாளம் தட்டுவதுபோல் பேசி, செல்லமாகப் புகழ்ந்தால், குழந்தை சும்மாவா இருக்கும்? மீனுக் குட்டி இஷ்டம்போல் செயல் புரிந்தாள். பெரியவர்கள் பார்த்து மகிழ்ந்தார்கள். அவள் வாயில் வந்ததை எல்லாம் சொன்னாள். அம்மாவும் பாட்டியும் ரசித்துச் சிரித்தார்கள். ஆகவே மீனு மேலும் அதிகமாக உளறினாள். அப்பா வீடு திரும்பியதும், இன்னிக்கு மீனுக் குட்டி என்ன செய்தாள் தெரியுமா? என்று அம்மாவும், மீனம்மா எவ்வளவு சாமர்த ‘தியமாப் பேசுகிறா என்கிறே! என்று பாட்டியும் ரிப்போர்ட்” செய்யத் தொடங்குவர். இதனால் எல்லாம் மீனு பெரியதனம் பெற்று வந்தாள்.

- பெரியவர்களின் சுபாவமே விசித்திரமானதுதான். அவர்களுக்கு மனமிருந்தால் கொஞ்சுகிறார்கள். குழந்தையின் சிறு செயலுக்குக்கூட ஆகா-ஊகூ என்று கூவி மகிழ்ந்து போகிறார்கள். வாழ்க்கை வெயில் அவர்கள் உள்ளத்தை வாட்டுகிறபோது, பெரியவர்கள் தங்கள் எரிச்சலையும் கசப்பையும் குழந்தைகளிடம் பிரயோகிக்கிறார்கள். மீனுவின் அம்மாவும் அப்பாவும், பாட்டியும் மனிதர்கள்தானே!

மீனுக் குட்டியை ஏ குரங்கே தரித்திரம் சனியன்’ என்றும் அவர்கள் திட்டுவதுண்டு. கோபம் அளவுக்கு அதிகமாகி விடுகிறபோது, ‘பாவம், நாலு வயசுக் குழந்தைதானே! என்ற நினைப்பே இல்லாமல், அதை மொத்து மொத்து’ என்று மொத்துவார்கள். பிறகு, கொஞ்சாமலும் பாராட்டாமலும் இருந்து விடுவார்களா? இருக்கத்தான் முடியுமா அவர்களால்?

மீனம்மாளுக்கு எல்லாமே பழகிப்போய்விட்டது. பெரியவர்கள் அடித்தால், அழவேண்டியது; ஏசினால் பேசாமல்