பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34• புண்ணியம் ஆம் பாவம்போம்!

எனக்குக் கல்யாணம் நடைபெறுகிறது. நண்பர்கள் இரண்டு பேர் என்னோடு இருக்கிறார்கள். ஏன் பிரதர் சந்தோஷம் இல்லாமல் இருக்கிறீர்கள்?’ என்று ஒருவர் கேட்கிறார். எனக்கு உண்மையில் ரொம்ப வருத்தம் தான். சே, கல்யாணம் என்று ஒன்று நடந்து, ஒரு பெண் வந்து விட்டாள். அவளோடு பழகி, அவளை ஃபிரண்ட்புடிச்சு’ அவள் விருப்பு வெறுப்புகளை அறிந்து, அவளை மகிழ்வித் தாக வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. சீண்ட்ரம் புடிச்ச எழவுதான். இவ்வாறு என் மனம் குழம்பித் தவித்துக்கொண்டிருந்தது. அவசரமாக ஒரு நபர் வந்தார். கல்யாணப்பெண், அவளுடைய ‘பாய் ஃபிரண்டோடு ஒரு காரில் ஏறி எங்கோ போய்விட்டாள்; திரும்பி வரமாட்டாள் போல் தெரியுது என்று பரபரப்போடு பேசினார். நான் மகிழ்ச்சி அடைந்தேன். பிரச்னை இவ்வளவு சுலபமாகத் தீர்ந்துவிடும் என்பது தெரியாமல் வீணாக மனசைக் குழப்பிக்கொண்டு தவித்தேனே. விட்டது சனியன், விட்டது சனியன்! நம்மை விட்டு விட்டதடா என்று உற்சாகமாகக் கத்தினேன். அதைக் கொண்டாட நண்பர்களோடு பெரிய ஒட்டல் ஒன்றைத் தேடிப்போகிறேன்...

இதுவரை பொறுமையாகப் படித்திருந்தால், உமக்கு நிச்சயமாக ஒரு எண்ணம் தோன்றியிருக்கும். இவன் உளநிலை சரியாக இல்லை; எங்கோ ஏதோ கோளாறு இருக்கிறது என்று எண்ணினோமே அது சரிதான். இப்போது அது உறுதிப்பட்டுவிட்டது... இப்படி நீர் எண்ணுகிறீர். இல்லையா?

அஹஹ்ஹா! நீர் எண்ணுவது சரியாகவே இருந்து விடலாம். நான் ஏன் உமது திருப்தியைக் கெடுக்க வேண்டும்?