பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் - 4.39

எங்கெங்கோ எவ்வளவு எவ்வளவோ படித்திருந்தான். அது வரை அப்படி யொரு சுகானுபவம் அவனுக்கு ஏற்பட்ட தில்லை. இப்போது அதை அனுபவித்து உணர்ந்தால் என்ன? அவன் மனக்குறளி தூண்டியது.

நெஞ்சில் சிறு பதைப்புடன், அவன், நெடுகிலும் பார்வை எறிந்தான். எல்லோரும் அயர்ந்து துயிலில் ஆழ்ந்து கிடந்தனர்.

ஆயினும் அவன் சிறிது தயங்கினான். பிறகு துணிந்து விரல்களைத் தன் மடிமீது கிடந்த சடைப் பின்னல் மீது வைத்தான். லேசாகத் தொட்டு, யாரும் கவனிக்கவில்லை என்று நிச்சயம் செய்துகொண்ட பிறகு அன்ப்ாக, மிருதுவாகத் தடவினான். பின்னலின் துணியிலிருந்து, அகலமான மேல் பகுதிவரை மெதுவாக வருடினான். அவனுக்கு ஏதோ ஏமாந்து விட்டதுபோன்ற உணர்வே ஏற்பட்டது.

துங்கிக் கிடக்கும் எவளோ ஒருத்தியின் துவண்டு. கிடக்கிற கூந்தலைத் தொடுவதிலோ தடவிக் கொடுப்பதிலோ எவ்விதமான இன்பமும் இல்லை என்ற ஞானோதயம் அவனுக்கு உண்டாயிற்று. உணர்வற்ற அந்த ‘மயிர்க் கற்றையை எடுத்துத் தூங்கும் தலையருகே தலையணை.மீது போட்டான்.

நெளிந்து துவளும் பின்னல் பார்வைக்கு இனிய அழகுக் காட்சி யாகத்தான் விழுந்து கிடந்தது.

அவன்.அந்தப் பின்னலையும், அது அணி செய்த தலை யையும், அமைதியாய் உறங்கிய முகத்தையும் பார்த்தபடியே இருந்தான். அவனது மனம் அமைதியாய் இல்லை. அது.குறு குறுத்துக் கொண்டிருந்தது, விழித்த நிலையில் உணர்ச்சி களைப் பிரதிபலிக்கும் கண்ணோடு, முகத்தோடு, பெண் பார்த்துக் கொண்டிருக்க, அவளுடைய கூந்தலை விரல்களால் நீவுவதிலும், பின்னலைப் பிடித்து இழுப்பதிலும்,