பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 புண்ணியம் ஆம் பாவம்போம்:

‘பாலச்சந்திரன் நோட்டை இங்கே எடுத்து வா. உ.ம்... ஆசிரியரின் அதட்டல் உறுமலாகத் தெறித்தது. ‘இல்லே, நான் அங்கே வரவா?

பாலச்சந்திரன் தயங்கித் தயங்கி ஆசிரியர் முன்னே வந்தான். எடுத்து வந்த பாடநோட்டை அவரிடம் நீட்டினான்.

ஆராவமுதன் அதை வாங்கிப் புரட்டினார்.

பாட நோட்டினுள் படங்கள், சினிமா நடிகையரின் கவர்ச்சித் தோற்றங்கள். ஜெயமாலினியும் சிலுக்கு ஸ்மிதாவும் அவரவர் உடல் வளப்பத்தை வசீகரமாக, மினுமினு வர்ணங்களில், வெளிச்சமிட்டபடி மோகப் பார்வையும் மோகனப் புன்னகையும் சிதறிக் கொண்டிருந் தார்கள், ஜெயமாலினி உடம்பில் மிகக் குறைவான துணியே ஒட்டி நின்றது. சிலுக்கு நின்ற போஸ்கள் கிறங்க வைப்பதாய் தோன்றின. -

ஆசிரியர் படங்களைப் பார்த்தார். பையனை உற்றுப் பார்த்தார்.

‘இதுதான் படிக்கிற லட்சணமோ? இதை மாதிரி அசிங்கமான படங்களை நோட்டில் வைத்துக்கொண்டு, பாட நேரத்தில் பார்த்து ரசிக்கிறீர்களாகும்? யாரிடம் கவர்ச்சி அம்சம் அதிகம் இருக்கு என்று ஆராய்ச்சி நடத்தினர்களோ? அவருடைய அதட்டல் கனத்த குரலாய் வெடித்தது.

வறண்ட புவிஇயலை விட ரசமான அழகியல் ஆய்வு ஸார் இது குறும்பன் ஒருவன் குரல் கொடுத்தான்.

வகுப்பு முழுதும் வெடிச் சிரிப்பில் கலீரிட்டது.

அமைதி!’ என்றார் ஆசிரியர்.