பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 புண்ணியம் ஆம் பாவம்போம்!

திருவாளர் கடனர்

மிஸ்டர் ராம் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்தவர். ஒரு கம்பெனியில் உத்தியோகம். மாதச் சம்பளம் முந்நூறு ரூபாய் அது அவர் செலவுக்கும் குடும்பச் செலவுக்கும் பற்ற வில்லை. ஆகவே, நண்பர்கள், தெரிந்தவர்கள் வேண்டியவர்கள். புதிதாக அறிமுகமாகிறவர்கள் எல்லோரிடமும் அஞ்சு, பத்து, இருபது என்று ஆளுக்குத் தக்கபடி - சமயத்துக்குத் தக்கபடி - கடன் கேட்டு வாங்கி விடுவார். ஏதாவது காரணம் சொல்லி, எப்படியாவது கடன் வாங்கி, கவலை இல்லாமல் செலவு பண்ணவேண்டியது. அவருடைய வாழ்க்கை வண்டி இப்படியே ஒடுகிறது.

மிஸ்டர் ராம் அவசரம் அவசரமாக சந்திரனைத் தேடி வருகிறார். சந்திரன் புதிதாக அறிமுகமான நண்பர்.

‘வாங்க சார். ஏது இந்த வெயிலிலே இவ்வளவு தூரம்?” ‘ஒரு உதவி செய்யணும். மறுக்கப்படாது.”

‘grr? ?

அர்ஜண்டா பத்து ரூபா வேணும். மாசம் பிறந்து, சம்பளம் வாங்கித் தந்து விடுகிறேன். வீட்டிலே அரிசி இல்லே. ரேஷன் வாங்கி ஆகணும். அதுக்குத்தான் - ரெண்டு மூணு இடத்திலே கேட்டுப் பார்த்தேன். புரளலே. உங்களை தொந்தரவு பண்ணப் படாதுன்னு நெணைப்பு. ஆனாலும், பாருங்க. கடைசியா உங்க உதவியை நாடித்தான் வர வேண்டியதாச்சு..

ராம் ரகசியமாகவும், nரியஸாகவும், குரலில் ஏற்ற இறக்கங்கள் காட்டிப் பேசுகிறார்.

நண்பர் அதனால் என்ன என்று சொல்லி, பத்து ரூபாய் கொடுக்கிறார்.