பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 புண்ணியம் ஆம் பாவம்போம்:

அதைவிட பயங்கரமாக முன் நிற்கிறது விடியற் காலையில் நடக்க வேண்டிய சடங்கின் நினைவு. சே, என்ன பிழைப்பு இது என்ன வாழ்க்கை வேண்டிக் கிடக்கிறது இப்படித் தொழில் செய்து ஜீவிக்க!

அவன் உள்ளத்து உதைப்பு அதிகரித்தது.

நேரம் ஓடியது.

அவன் வெளியே வந்து பார்த்தான். இரவின் குளிர். வானத்தின் எண்ணிலா வெள்ளிகளின் ஒளிக்கூட்டம். எங்கோ, துக்கம் கலைந்த - அல்லது, விடிந்து விட்டது என்று ஏமாந்த ஒரு பறவையின் ஒற்றைக்குரல்...

இன்னும் நேரம் கிடக்கிறது என்று நினைத்தான். உள்ளே வந்து கதவை அடைத்து, விளக்கைப் பெரிதாகத் தூண்டி விட்டு உட்கார்ந்தான். அவனுக்கு ஒன்றுமே ஓடவில்லை.

‘இது நியாயமேயல்ல. பாபம் தான். இந்த வேலை வேண்டாமென்று சொல்லி விடலாமா? ஆனால், கடைசி நேரத்தில் சொன்னால் அதிகாரிகள் தன்மீதுதான் பாப்வார்கள்...”

அவனால் திட்டமாக எந்த விதமான முடிவுக்கும் வர முடியவில்லை. ஒரே யோசனையை வைத்துக் கொண்டு திண்டாடி மயங்கினான். விடிந்தது.

அதிகாரிகள் செய்ய வேண்டியவற்றை முறைப்படி செய்தார்கள். பலியிடத் தயாராக நிறுத்தப்படும் ஆடு போல் வந்து நின்ற குற்றவாளியை அவன் பார்த்தான். தனக்கு ‘கொலைகாரன் என்ற பெயரை ஊர்ஜிதமாக்கப் போகிற அந்த ஆசாமியை அவன் முன்பு கண்டதில்லை. அவன் யாரோ! என்ன குற்றம் செய்தானா? பாபி. தன்னைப் பாபத்துக்கு ஆளாக்குகிற ஒரு பாபி