பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70* புண்ணியம் ஆம் பாவம்போம்!

‘ஏனய்யா இங்கேயே இருக்கிறீர்? சும்மா இப்படி எங்காவது போய் வருவது தானே? என்று ஒருவர் கேட்டார்.

‘எங்கே போக இந்த ஊரிலே எங்கே போய், என்ன செய்து, எப்படிப் பொழுது போக்க முடியும்? என்று அவன் கேள்விகளை அடுக்கினான். -

வெளியூர் எங்காவது போய் வருவது? உம்மிடம் வசதிகள் இல்லையா என்ன? ஜாலி யாக டுர் கிளம்பி, பல இடங்களையும் சுற்றிப் பார்த்து விட்டு வருவதுதானே?” என்றார் மற்றவர்.

‘எதுக்காகப் போகனும்? ஏன் போகணும்னு கேட்கிறேன்’ என்று அவன் ஓங்கிக் கேட்டான்.

‘பொழுது போகும். நாலு இடங்களைப் பார்த்த மாதிரியும் இருக்கும்.’

‘பொழுது போகலேன்னு நான் யார் கிட்டேயும் முணுமுணுத் தேனா? என்று கேட்டான் அவன். ‘நாலு இடங்களைப் பார்க்கறதினாலே என்ன கிடைச்சிடும்? என்கிட்டே எத்தனையோ பேரு இப்படிக் கேட்டாச்சு. தாஜ் மகாலைப் பார்க்க வேண்டாமா? காஷ்மீரைப் பார்க்க வேணாமாய் யா என்றெல்லாம் கேட்பாங்க. பெளர்ணமி நிலவிலே தாஜ் மகாலைப் பார்க்கக் கொடுத்து வச்சிருக் கணும்; இமயமலையின் பணி படர்ந்த சிகரங்களிலே சூரிய ஒளி செய்கிற ஜாலங்களைப் பார்ப்பது கண்களுக்குக் கிடைக்கும் பாக்கியமாகும் என்றெல்லாம் ஒருவன் அளந்தான். நான் சொன்னேன் - வேய் இங்கே வாரும். எங்க ஊர் கோபுரத்தின் தங்கக் கலசத்திலே சூரிய ஒளி பட்டுத் தெறிக்கிற அற்புதத்தை நீரு பார்த்திருக்கீரா? இந்த ஊரு ஆழ்ந்து துங்கிக் கிடக்கிற நடு ராத்திரி சமயத்திலே, பால் போல நிலா எங்கும் பரவியிருக்கிறபோது தோன்றுகிற