பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 . புண்ணியம் ஆம் பாவம்போம்!

தொழிலாக உடையவர்கள். அவர்களில் அநேகர், இருண்ட வீடுகளின் காற்றோட்ட மில்லாத அறைகளிலேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து, பெரியவர்களாகி, அந்தத் தொழிலை மேற்கொள்கிறார்கள். அதிலேயே அடிபட்டு, சீக்கிரமே செத்தும் போகிறார்கள். அவர்கள் ஒரு நாள் கூட நீல வானத்தைக் கண்டது கிடையாது. நட்சத்திரங்கள் பூத்துக் குலுங்குகிற இரவின் அழகை வானின் கீழ் நின்று பார்த்தது கிடையாது. இப்படி எல்லாம் எழுதியிருந்தான். அதைப் படிக்கையில் என் மனசை என்னவோ செய்தது. இப்படியும் மனிச சென்மங்கள் வாழுது பார்த்தியான்னு ஒரு நெனைப்பு. இப்படி எல்லாம் இருக்கிறப்போ, ஏய் நீ அங்கே போகலியா - இங்கே போகலியா - இந்த இடத்திலேயே குந்தி இருக்கலாமான்னு கேட்கிறதே வீணத்தனம் இல்லையா?...

அவன் குமுறிய கோபத்தால் சிறிது உறுமிக் கொண்டான். அவன் கண்கள், ரோடு வழியே போய்க் கொண்டிருந்த ஒரு வண்டியைத் தொடர்ந்தன. சற்றுத் தள்ளி ஒடிய ஒரு நாயின்கூட ஒடின. தொலைவில் நின்ற கன்றுக்குட்டி அருகில் நின்றன. ஒரு பெண் பின்னாலேயே போயின. *

அவன் மனசுக்கும் கண்கள் இருந்தன. அவை கூர்மையான சக்தி பெற்றிருந்தன.

- அவள் போகிறாள். தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டு நிற்கும் பெண்ணோடு பேசுவதற்காக நிற்கிறாள். பிறகு நடக்கிறாள்... ஆற்றங்கரைப் பக்கம் போவாள், அங்கே காடாக வளர்ந்து கிடக்கும் முள் மரங்கள் மத்தியில், நிதானமாகச் சென்று, விறகுக்காகக் கொம்புகளை வெட்டுவாள். வெட்டிக் கொண்டே இருப்பாள். அவளுக்கே அலுத்துப் போன பிறகு, ஒரு கட்டுக்குப்போதும் என்று தோன்றும். வெட்டுவதை நிறுத்துவாள். உட்காருவாள்.