பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. தொலைந்து போன சொர்க்கம்

Lifலுப்பிள்ளைக்கு அவருடைய முழுப்பெயர் பால் வண்ணம் பிள்ளை. அப்படி யாரும் அவரை அழைப் பதுமில்லை. குறிப்பிடுவதும் இல்லை - அந்த நினைப்பு தீராத தாகமாய், பெரும் தவிப்பாய் தீவிர ஏக்கமாக வளர்ந்து வந்தது.

அந்த நினைப் பின் வித்து, அவர் தாமிரவர்ணி ஆற்றோரத்து சிறு கிராமத்தைவிட்டு வெளியேறி, உத்தியோக நிமித்தம் ஊர் ஊராகச் சென்று, முடிவில் பட்டணத்தில் குடியேறிய காலம் தொட்டே அவருடைய உள்ளத்தில் ஆழப்பதிந்து வேரோடியிருந்தது. பட்டனவாசம் அதை கப்பும் கவருமாகத் தழைத்து வளரச் செய்தது.

இதெல்லாம் ஒரு ஊரா? இங்கே வாழ்வது எல்லாம் ஒரு வாழ்க்கையா? தாமிரவர்ணி ஆற்றங்கரை ஊருக்கு, அங்கே வாழ்வதற்கு, ஈடு இணை உண்டுமா? ஆற்றிலே குளிப்பதே ஒரு சுகம். அது தனிரக இன்பம். அப்புறம், அமைதியான, வளமான அந்தக் கிராம வாழ்க்கை ஆகா, ஆகா! -