பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 புண்ணியம் ஆம் பாவம்போம்!

‘பிரதர். நீர் எந்தப்பக்கம்? என்று சந்திரன் கேட்கவும், ‘ப்சா என்று அலட்சிய ஒலி சிதறினான் சோமு. ஆல்வேய்ஸ் லீட் டு ரோம்னு சொல் லி வச்சான். அது அந்த காலம்! இப்போ. ஆல்வேய்ஸ் லீட் டு ஸோம்ஸ் ரூம் சோமுவின் ரூமுக்கு எந்தப் பாதையில் போனால் என்ன என்று அறிவித் தான,

ஸேரி, எப்படியாவது போம்! என்று சொல்லிவிட்டு, சந்திரனும் சாமிநாதனும் ஒரு திசையில் நடந்தார்கள். கை கோத்தபடி, ஜாலியாகப் பேசியவாறு நடந்தகொண்டிருந்த இருவரையும் கவனித்து நின்ற சோமு சிரித்தான். பெட்டைக் கிறுக்குப் புடிச்ச பயலுக. இப்ப சினிமா விடுற டைம். தியேட்டர்களுக்குள்ளேயிருந்து கலர்கள் நிறையவே வரும். மோப்பம் பிடிக்கப் போறானுக. லேரியோ, ஸ்கர்ட்டோ கிடைக்குமான்னு கண் தூண்டில் வீசிக்காத்து நிற் பானுக. iணப் பயலுக! என்று அவன் மனம் விசிலடித்துக் கனைத்தது.

‘இப்பவே ரூ முக்குப் போயி என்ன செய்ய 2 மணி ஒன்பது தான் ஆகுது. இப்படி சும்மா இந்த ரோட்டிலே கொஞ்ச தூரம் நடந்துவிட்டு...”

அவன் கால்கள் தாமாகவே இயங்குவனபோல் நடந்து கொண்டிருந்தன. -

ரோடில் பகல்நேரப் பரபரப்பும், போக்குவரத்து நெருக் கடியும் இல்லை. ஒன்றிரண்டு கார்களே போய் வந்தன. பகல் நேரம் என்றால் எண்ணித் தொலையாது. நாய் பெருத்த மாதிரி கார்கள் பெருத்துப் போச்சு. பகலில் அதுவும் ஆபீஸ்களுக்குப் போகிற அல்லது, ஆபீஸ் நேரம் முடிந்து எல்லோரும் வீடு திரும்புகிற வேளையில் ரோடின் ஒரு

புறத்திலிருந்து மறுபுறம் போவதற்கு வெகுநேரம் காத்து நிற்கவேண்டும். இப்ப எத்தனை தடவை வேண்டுமானாலும்