பக்கம்:புண்ணியம் ஆம் பாவம் போம் (சிறுகதைகள்).pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் *91

நாராயணன்தான் அவசரப் பட்டான். நேரமாச்சு நான் மெடிகல் ஷாப்புக்குப் போகணும். மருந்து வாங்கிக் கொண்டு சீக்கிரம் வீடு சேரணும். இப்ப போனால்தான் பஸ் கிடைக்கும்.’

ஆமாமா. பஸ்ஸுக்கு வேறே காத்து நிற்கனுமே!’ என்று ஒவ்வொருவரும் முணு முணுத்தார்கள். எழுந்தார்கள் கடைசி முறையாக, ரூஃப் கார்டனின் ஒளிமயமான காட்சியை - ஒளி வெள்ளத்தில் நனைந்தபடி மினுமினுத்துக் கொண்டிருந்த நாகரிக நங்கையரையும் அவர்களுக்கு ஏற்ற துணைவர்களாய் விளங்கப்போட்டியிட்ட ஆண்களையும் - பார்வையால் தொட்டுத்தடவி, ஏக்க மூச்சு சிதறினார்கள். பீடாவைக் குதப்பியவாறே கீழே இறங்கினார்கள்.

அப்படியும் அவர்கள் பிரிந்து அவரவர் திசையில் செல்வதற்கு மேலும் கால்மணி நேரம் தேவைப்பட்டது.

நாராயணன்தான் முதலில் ஓடினான். அதோ அதோ: பஸ் வந்துவிட்டது!’ என்று கையை ஆட்டியவாறே , ஒடினான்.

அவன் ஒடிப்போவதையும் ஊர்ந்து செல்ல ஆரம்பித்த பஸ்ஸில் வேகமாகத் தொத்திக் கொண்டதையும் மற்றவர்கள் பார்த்தார்கள். இது என்ன அவசரமோ தேவையற்றது. இந்த பஸ்போனால் இன்னொரு பஸ், இடை நேரத்திலே தலையா போய்விடும்? இல்லை, பூகம்பம் வந்து இவன் வீடே அஸ்தமிச்சுப் போகுமா? சுத்த மடத்தனம்’ என்று சோமு நினைத்தான். ஆனால், வெளியே சொல்லவில்லை.

சிதம்பரம் வாட்சைப் பார்த்தான்... இன்னும் நேரம் கிடக்கு. இப்பவே போனாலும், லலிதாவைக் கூட்டிக் கொண்டு ஹாயா வாக் போகலாம். ஏதாவது ஃபிலிமுக்குப் போனாலும் போகலாம். அப்போ நான் வரேன். நாளை பார்ப்போம்! என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தான்.