பக்கம்:புதிய பார்வை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | 0 புதிய பார்வை

கண்ணபிரானுடைய தனிமையின் பெருமையைப் பேருரு வத்தில் காண்கின்ருேம். இராமாயணத்தில் கடவுளான இராமன் மனிதனுக வந்து சிரமப்படுகிருன். பாகவதத் திலோ கண்ணன் குறுநகை புரிகிருன்.

வைணவர்களுக்கு இராமனும் கண்ணனும், சைவர் களுக்கு விநாயகனும் முருகனும் மிக உயர்ந்த மிக அழகிய இதிகாச பாத்திரங்களாக இங்த நாட்டில் கிடைத்திருக்கிருர் கள். இதிகாசச் செல்வங்களே உணர்ந்து பெருமைப்படும் பண்பு இங்தியர்களுக்கு மறுபடியும் உண்டாக வேண்டும். குழப்பங்கள் கிறைந்த இந்தக் காலத்தில் ஆசைப்படுவோம் ாாம். நமது இன்றைய வாழ்வுக்குத் தேவையான சமயோ சிதம், ராஜதந்திரம், கலைகள், அறநெறிகள் எல்லாம் அங்த இதிகாசங்களில் இருப்பதை நாம் புரிந்துகொள்ளவாவது அவற்றை நாடிக் கற்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/112&oldid=598172" இலிருந்து மீள்விக்கப்பட்டது