பக்கம்:புதிய பார்வை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருவகை நிலங்கள்

தமிழ் நாட்டுச் சொற்பொழிவு மேடை நாடகமேடை. இசை ம்ேடை, திரைப்பட மேடை, பத்திரிகை, புத்தகம் ஆகிய இலக்கிய மேடை - என்னும் எல்லாவற்றையும் பொறுத்த ஒரு பொதுவான கணிப்பை இங்தக் கட்டுரையில் பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இவற்றில் காம் பெருமைப்பட முடியாத சில கிலேகள் இன்னும் உள்ளன.

மேற்கண்ட துறைகளில் செய்யப்படும் எல்லா விமர் சனங்களிலிருந்தும் படைப்பாளிகள் சுலபமான ஒரு வாதத்தைச் சொல்லித் தப்பிவிடப் பார்க்கிருர்கள். என் ஆத்ம திருப்திக்காகச் செய்கிறேன் உங்கள் குறைகள் பற்றி எனக்குக் கவலே இல்லை என்று சொல்லி எளிதாகப் பலர் தப்பிவிட முயல்கிருர்கள். இந்த எல்லாத் துறைகளிலும், இவற்றை ஒத்த வேறு பல துறைகளிலும் ஆத்ம திருப்தி" என்பது படைப்போன், நுகர்வோன், இருவரையும் பொறுத்த விஷயமே ஒழியத் தனியான ஒருவரை மட்டும். பொறுத்த விஷயமில்லை என்பது மறைக்கப்படுகிறது. நுகர் கிறவனுடைய ஆத்ம திருப்தியும் சேர்த்துத்தான் கணக். கிடப்பட வேண்டும். தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் சுவைகளின் இயல்பைப் பற்றிக் கூறும்போது எல்லாக் காலத்துக்கும் பொருங்தி வரக் கூடிய ஒரு தத்துவத்தை மிகக் அழகாகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிரு.ர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/113&oldid=598174" இலிருந்து மீள்விக்கப்பட்டது