பக்கம்:புதிய பார்வை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 2 புதிய பார்வை

"இருவகை நிலத்தின் இயல்வது சுவையே'

(தொல்-பொருள்-மெய்ப்)

என்கிருர் அவர். இது நாடக நிலைக்கும் மெய்ப்பாட்டுக்கும் மட்டுமே கூறப்பட்டதாயினும் மேலே கூறிய எல்லாவற்றுக் குமே பொருங்தும். எவ்வாறு பொருங்தும் என்பதைத்தான் இனிமேல் பார்க்கவேண்டும். உய்ப்போர், துய்ப்போர் இரு சாரார்கிலத்தும் சுவைத்தல் நிகழவேண்டும் என்பது இந்தச் குத்திரத்தின் பொருள். கலைக்கு உய்ப்போன் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு துய்ப்போனும் முக்கியம். உய்ப் போன் நிலத்தில் விளைவதைத் துய்ப்போன் கிலமே சுவை கண்டு முடிக்க இயலும். உய்ப்போன் சுவை துய்ப்போ னிடமே பரிபூரணம் அடைகிறது. ஆனல் இன்று பெரும் பாலான துறைகளில் இந்த இரண்டாவது கிலத்தைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. பொருட்படுத்துவதுமில்லே. .உய்ப்போன் தன்னைத்தானே கலேயின் அதிகாரியாகப் பாவித்துக் கொள்வதையே எங்கும் காண்கிருேம். இந்த கிலை மாற வேண்டும். மாறியே தீரும்.

சொற்பொழிவு மேடை:

துய்ப்பவர்களே எடை போடாமல் சம்பந்தமில்லாமல் பேசப்படும் வழவழவென்ற பேச்சுக்கள் மேடைகளில் அதிகமாக நிகழ்கின்றன. கேட்போர் தொடர முடியாத சொற்பொழிவுகள். எதைக் கேட்க கூட்டப்பட்ட கூட் .டமோ அதைக் கேட்கவே முடியாமல், கிடைத்ததை அல் லது தோன்றியதைப் பேசும் மொழித் திறமை மட்டுமே உள்ள பேச்சாளர்கள். தமிழ் மேடைச் சொற்பொழிவில் அடுக்குமொழி, மோனே, சவடால் போன்ற புற அம்சங் களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் கருத்துக்குத் தரப் படுவதில்லை. மேடை என்ற உய்ப்போர் கிலத்துப் பேச்சு அவை என்னும் துய்ப்போர் கிலத்து இரசிகத் தன்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/114&oldid=598176" இலிருந்து மீள்விக்கப்பட்டது