பக்கம்:புதிய பார்வை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 26 புதிய பார்வை

கைக்குப் பயன்பட வேண்டியது அவசியம். ஒரு தனி மனிதனுடைய வாழ்க்கை ஒன்ருக இருப்பதற்கு ஒளிமய மான சிங்தனேகளும். கட்டுப்பாடுகளும் எவ்வளவுக்கு வேண்டுமோ அவ்வளவுக்குப் பொது வாழ்வு கன்ருக இருப் பதற்குப் பல தனி மனிதர்களின் சமுதாய நம்பிக்கை வேண்டும். கான் வளமாக வாழ வேண்டும் என்று மட்டும் ஆசைப்படுவது என்னுடைய சொந்த வாழ்க்கை கம்பிக்கை. எல்லாரும் வளமாக வாழ வேண்டும் என்று என்னேயும் அதில் சேர்த்துக் கொண்டு பொதுவாக ஆசைப் படுவது சமுதாய கம்பிக்கை. இங்த நூற்ருண்டில் சராசரி மனிதனுடைய திருப்தி இந்த இரண்டு கம்பிக்கைகளையும் பொறுத்ததாகவே இருக்கிறது. சமுதாய நம்பிக்கை சிறிதுமே இல்லாதவனுடைய சுகம் பல பேர்களுடைய தாக்குதலுக்கு ஆளாகிறது. அங்கச் சுகத்தைப் பூர்ஷாவா மனப்பான்மை என்று சொல்லி இகழவும் முடியும். பொருளாதார ஏற்றத் தாழ்வுகளையும் கடந்து சமுதாய கம்பிக்கையை மிகவும் ஆழமாக வேரூன்றச் செய்ய வேண்டும். -

ஒரு காட்டின் வாழ்க்கை வளமாயிருக்க வேண்டும் என்பதோடு அங்த வளம் எங்த விதத்திலும் தேசீய கலத் துக்குப் புறப்பானதாக இருக்கக் கூடாது. தேசீய கலனே யும் ஒருமைப்பாட்டையும் காப்பாற்றி வளர்ப்பதற்கு அடிப்படையான துரண்டுதல் ஒவ்வொரு தனி மனிதனு: டைய மனத்திலும் சமுதாய நம்பிக்கையும் சேர்ந்து வளர்வதுதான்.

மனம் கிறையாமை, செளகரியங்களை மாறி மாறி எண்ணி ஏங்குதல்,-போன்ற சமுதாயக் குறைகளை மறந்து ஆக்கப் பணிகளில் ஈடுபட்டு காட்டை வளர்ப்பதற்குச் சமுதாய நம்பிக்கையைப் பெருக்கி வளர்க்க வேண்டும். தேசிய ஒருமைப்பாடு, மொழிவாரிப் பிரிவுகளைக் கடந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/128&oldid=598204" இலிருந்து மீள்விக்கப்பட்டது