பக்கம்:புதிய பார்வை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 புதிய பார்வை

பிள்ளைகளேக் கவர்ந்து இழுக்கத் தவறி விடுகின்றன. திரைப்படச் சுகங்களைப் போல் மின்னி மின்னி நேர்கிற சுகங்களுக்குத்தான் இன்றைய இளங் தலைமுறை மனம் தாழ்த்த ஆசைப்படுகிறது. வயதானவர்கள், இளைஞர்கள் என்ற பாகுபாடு இதற்குத் தேவையில்லே. அறத்திலும், நீதியிலும், நேர்மையிலும் நம்பிக்கை வைப்பதற்கு வயது ஒரு காரணமும் ஆகாது. அவற்றில் கம்பிக்கை வைக்கிற இளம் பிள்ளேயே மனம் முதிர்ந்தவகைத் தோன்றவும், நம்பிக்கை வைக்காத வயது முதிர்ந்தவரே மனம் முதிராத வராகத் தோன்றுவதும் கூடும்.

திரைப்பட வளர்ச்சி போல் ஒடும் சுகங்களில் மயங்கும் பரிதாபகரமான சூழ்நிலை வாழ்க்கையைப் பற்றிக் கொண்டு ஆட்டுகிற தலைமுறை எதுவோ அது தேசத்தின் போதாத காலம். மின்னி மின்னி மறைய வேண்டுமென்று வேகம் வேகமான சுகங்களுக்குப் பறந்துகொண்டு தவிப்பதைவிட நிலையான நலத்துக்கு ஆசைப்படும் பரிபக்குவம் வருவது: நாட்டுக்கே கல்லது. இங்த காட்டின் எதிர்கால நலத்துக்கு இப்படி ஒரு பரிபக்குவம் மிகமிக அவசியமானது.

இவ்வாறு எழுதியிருப்பதனால் திரைப்படங்களும், நாடகங்களும் தமக்கென மேற்கொண்டு நிகழ்கிற கன்த யைப் பற்றிய விவாதப் பிரச்னை ஏதும் இங்கு எழுவதற்கு நியாயமில்லே. கலே உருவம்' என்ற அமைப்பில் அவை: கதாபாத்திரங்களின் வாழ்க்கை வளர்ச்சியையோ, சுக. துக்கங்களையோ விரைவாகக் (ஒரளவு தடுமாருமல்) காட்டு வதற்கு உரிமையுள்ளவைதாம். அவை அவ்வாறு காண்பிப் பதைக் கலையாக மட்டும் இரசிக்கலாம். வாழ்க்கையிலும் அதே அளவு வேகம் வேண்டுமென்று எங்கி நிற்கக்கூடாது. வெறும் துக்க கிகழ்ச்சிகளுக்காக அங்த வேகத்தை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனல் சுகங்கள் வரும்போது மட்டும் சினிமாக் கதை நிகழ்ச்சிகளைப் போல் வேகமாக வர வேண்டுமென்று பலர் ஆசைப்படுவார்கள். வேடிக்கை யான ஆசைதான் இது வேறென்ன சொல்வது ? 责

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/162&oldid=598272" இலிருந்து மீள்விக்கப்பட்டது