பக்கம்:புதிய பார்வை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6 புதிய பார்வை

கலைக்கு எல்லே அல்லது வரையறையைத் தருகிறது. வரை

யறை என்பது கிர்ப்பங்தமாக இங்கு குறிக்கப்படவில்லை.

சுபாவமாகக் கண்டு பிடிக்கப்படுகிறது. கிர்ப்பங்தமா அல் லது சுபாவமா என்பதைப் பொறுத்தே இலக்கணமும்

இலக்கியமும் வேறுபடுகின்றன. சுபாவத்திலிருந்து கண்டு பிடிக்கப்படும் இலக்கணமும், இலக்கணத்தின்படி உண்

டாக்கப்பட்ட சுபாவமும், கிச்சயமாக வேறுபடுபவை.

தமிழ் நாவல் இலக்கியம் என்னும் பிரிவு, எங்த இலக் கணத்தின்படியும் உண்டாக்கப்பட்ட சுபாவத்தைப் பெற்ற தல்ல, இலக்கியமாகக் கிடைத்த சிறந்த வெளிநாட்டு காவல்களிலிருந்துதான் சுபாவங்களும், சுபாவங்களிலிருந்து தான் வரையறையும் நமக்குக் கிடைத்தன. "குற்றிய லுகரம் இன்னது' என்பதுபோல் நாவலுக்கு முன்னேர் இலக்கண நூற்பாக்கள் தமிழில் இல்லை என்பதையே இப்படிச் சொல்ல முயல்கிறேன். நயங்களிலிருந்து கலங்

களேயும், நயமின்மைகளிலிருந்து நலமின்மைகளையுமே

கண்டுபிடித்து காவலுக்கு அளவுகோல்களாக விமர்சகர்கள்

இங்கு வைத்துக் கொண்டிருக்கிருர்கள். இலக்கியம் கண்ட பின்பே 'இஸங்'களேயே கண்டுபிடிக்க முடிந்தது என்பது

என் வாதம். எக்ளிஸ்டென்ஷியலிஸம், ஸர்ரீயலிஸம்,

ரியலிஸம் எல்லாமே அவற்றுக்கான இலக்கியங்களை மைய மாகக் கொண்டே அப்பெயரையும், இலட்சணத்தையுமே

அடைந்திருக்க முடியும். புளிப்பு உண்மையை உணர்ந்த

பிறகே புளி என்னும் சுவை சுட்டிக் காட்டப்படுவது போல

நிலைமைகளிலிருந்தே நியாயங்கள் பிறக்கின்றன. இனி மேல் இந்தப் பொருளை விரிவாகப் பார்க்கலாம். தமிழ்ப்

புதினங்களின் வயது ஏறத்தாழ இருபத்தைந்திலிருந்து

முப்பதாண்டுகள் வரை இருக்கும். சென்ற நூற்ருண்டின் இறுதியிலிருந்தே தமிழ் நாவலின் வரலாறு தொடங்கிவிட்

.டது என்று விமர்சகர்களும், இலக்கிய வரலாற்று ஆசிரியர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புதிய_பார்வை.pdf/18&oldid=597979" இலிருந்து மீள்விக்கப்பட்டது